சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

2020 வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான அறிவிக்கை காலம் ஜூன் 30 வரை நீட்டிப்பு.

Posted On: 07 MAY 2020 4:24PM by PIB Chennai

1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மத்திய அரசு,  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 என்னும் எஸ்.ஓ 1199 (இ) எண்ணின் படியான 2020 மார்ச் 23-ம் தேதியிட்ட வரைவு அறிவிக்கையை ஏப்ரல் 11-ஆம்தேதி அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டது. வரைவு அறிவிக்கையில் காணப்படும் உத்தேச அம்சங்களால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள பொதுமக்களிடமிருந்து, ஆட்சேபனைகள் மற்றும் யோசனைகளை அரசிதழ் அறிவிப்பு மக்களுக்கு வெளியிடப்பட்ட, 60 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் போது, இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதால், அது குறித்து கவலை தெரிவித்து, கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரி, பல்வேறு கோரிக்கைகள் அமைச்சகத்துக்கு வந்துள்ளன. எனவே, அமைச்சகம் நீண்ட பரிசீலனைக்குப் பின்னர், 2020 ஜூன் 30-ஆம் தேதி வரை அறிவிக்கை காலத்தை நீட்டிப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.(Release ID: 1621887) Visitor Counter : 341