ஆயுஷ்

கோவிட்-19 சிகிச்சைகளுக்கு, ஆயுஷ் சிகிச்சை முறை ஆய்வு உட்பட பல்முனைப் படிப்புகள் சுகாதார மற்றும் ஆயுஷ் அமைச்சர்களால் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டன.

Posted On: 07 MAY 2020 2:51PM by PIB Chennai

கோவிட்-19 சிகிச்சைகளுக்கான தற்போதைய முறைகளுடன் கூடுதலாக ஆயுர்வேத சிகிச்சை முறைகள் பற்றிய மருத்துவ ஆராய்ச்சிப் படிப்புகள் மற்றும், ஆயுஷின் சஞ்சீவனி செயலியும் இன்று புது தில்லியில் சுகாதார அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் மற்றும் ஆயுஷ் இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் ஆகியோரால் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சர் கோவாவில் இருந்து காணொளி மாநாட்டின் மூலமாகப் பங்கேற்றார்

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் மிக நீண்ட வரலாறு கொண்டது. இந்தியா, ஆயுர்வேதத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது.ஆயுஷ் முறைகள் கோவிட்-19 பெருந்தொற்றுப் பிரச்சினையைத் தீர்க்க உதவுமா என்பது குறித்து மருத்துவ ஆய்வுகள் மூலம் ஆயுஷ் அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது (முன்னெச்சரிக்கை, தடுப்பு மற்றும் கூடுதல் சிகிச்சை முறைகள்) என்று கூறினார்.

ஆயுஷ் அறிவுரைகளையும் நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளுதல், பயன்படுத்துதல் மற்றும் பின்பற்றுபவர்கள் பற்றிய விவரங்களை அறியவும், கோவிட்-19 பாதிப்பைத் தடுப்பதில் இவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்பதை அறியவும் ஆயுஷ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஆயுஷ் சஞ்சீவனி என்ற அலைபேசி செயலி உதவும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறினார்.

பெருந்தொற்று நோயைத் தடுக்க ஆயுஷ் அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும், ஆயுஷ் முறைகள் மூலமாக மருத்துவ ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும், நோய்த் தொற்று ஏற்படக்கூடிய மிக அதிக அளவு அபாயம் உள்ள மக்கள் தொகை உள்ள இடத்தில் முன்னெச்சரிக்கை மருந்துகள் அளிப்பதன் மூலமாக ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது என்று திரு ஸ்ரீ பட்நாயக் கூறினார்.

மக்களிடையே கோவிட் நோய் பரவாமல் தடுப்பதற்கான ஆயுஷ் அமைச்சக நடவடிக்கைகள் குறித்தும், அறிவுரைகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் அமைச்சம் ஆய்வு நடத்துகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கோவிட் நோய் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காகவும்,  இந்நோயைத் தடுக்க ஆயுஷ் ஆற்றும் பங்கை மதிப்பீடு செய்யவும் மருத்துவமனையிலும், இதர மக்களையும் அடிப்படையாகக் கொண்ட நான்கு ஆய்வுகளை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது என்றும் திரு நாயக் தெரிவித்தார்.



(Release ID: 1621881) Visitor Counter : 224