உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கோவிட்-19 தொடர்பாக ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் / தொலை உணர் இயக்க விமான அமைப்புகளை கருட் வலைதளம் வழியாக பயன்படுத்த அரசு நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன் விதிவிலக்கு

Posted On: 05 MAY 2020 7:06PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று தொடர்பான பணிகளுக்காக (தொலைஉணர் இயக்க விமான அமைப்பு) / ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை அரசு நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளுடன் அதிவிரைவாக விதிவிலக்கு அளிக்க  வலைதளத்தை (https://garud.civilaviation.gov.in) மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை தொடங்கியுள்ளன.

ட்ரோன்களை பயன்படுத்துவதற்காக அரசின் அங்கீகாரம் என்பதன் சுருக்கமே கருட் ஆகும். உரிய அதிகார வட்டாரங்களில் அனுமதி பெற்று, இரண்டு வாரங்களுக்குள் இந்த வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், தேசிய தகவலியல் மையம் (என்ஐசி) ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு உதாரணமாக திகழ்கிறது. அனுமதி கிடைத்த 8 நாட்களுக்குள் இந்த வலைதளம் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை வீட்டிலேயே பணியாற்றிவரும் தேசிய தகவலியல் மையத்தின் மூத்த சிஸ்டம் அனலிஸ்டான விக்ரம்சிங் தொடங்கிவைத்தார்.

தொலைஉணர் இயக்க விமானங்களின் செயல்பாடுகள் தொடர்பான விதிகள் மற்றும் வழிமுறைகள், விமானங்கள் விதிகள், 1937ன் கீழ் உள்ள விதி 15ஏ மற்றும் 27.8.2018-ல் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட சிவில் விமானப் போக்குவரத்துக்கான தேவைகள் பிரிவு 3, தொடர் 10-ன் பகுதி 1-லும் உள்ளன.

இந்த பொது அறிவிக்கையின் வழிமுறைகள், மறுஉத்தரவு வரும் வரை தொடரும்.

எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்காமல், இந்த பொது அறிவிக்கையின் வழிமுறையை மாற்றம் செய்யவோ, திரும்பப் பெறவோ அல்லது நீட்டிக்கவோ இந்திய அரசுக்கு முழு உரிமை உண்டு.

இந்த பொது அறிவிக்கையின் வழிமுறைகளை மீறினால், நிபந்தனையுடனான விதிவிலக்கு செல்லாததாக மாற்றப்படும்; மேலும் உரிய சட்டத்தின்படி, தண்டனை விதிக்கப்படும்.  

பொது அறிவிக்கையை பார்ப்பதற்கான இணைப்பு:

https://www.civilaviation.gov.in/sites/default/files/Public%20notice_GARUD_Exemptions%20for%20Covid-19_2%20May%202020.pdf

 

 

****



(Release ID: 1621405) Visitor Counter : 237