உள்துறை அமைச்சகம்
பல நுழைவுக்கான உரிமத்துடன் வாழ்நாள் விசா வசதியுடைய OCI அட்டைதாரர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச விமான பயணிகள் இந்தியாவிற்கு வந்து செல்வதற்கான தடை நீங்கும் வரை அமலில் இருக்கும்.
प्रविष्टि तिथि:
05 MAY 2020 7:54PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், எந்தவொரு நோக்கத்திற்காகவும் இந்தியாவுக்கு வருவதற்காக வழங்கப்படும் பல நுழைவு வாழ்நாள் விசா வசதி கொண்ட (வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள்) அட்டைதாரர்களாக பதிவு செய்யப்பட்ட நபர்கள் இந்தியா திரும்ப தற்காலிகமாக தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது, இந்தியாவிற்கு வந்து செல்லும் சர்வதேச விமான பயணிகளின் தடை நீக்கப்படும் வரை தொடரும்.
இந்த காலகட்டத்தில் கட்டாய காரணங்களுக்காக இந்தியா வர விரும்பும் எந்தவொரு வெளிநாட்டவரும் அருகிலுள்ள இந்திய தூதரகங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை வைத்திருக்கும் நபர்கள், எந்த நேரத்திலும் இந்தியாவில் தங்குவது செல்லுபடியாகும். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரங்களை தெரிந்து கொள்ள Click here to see Official Order இங்கே தொடர்பு கொள்ளவும்.
*****
(रिलीज़ आईडी: 1621366)
आगंतुक पटल : 257