பாதுகாப்பு அமைச்சகம்
வான்வழி ஆய்வுகளுக்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழைப் பெற ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
05 MAY 2020 4:23PM by PIB Chennai
வான்வழி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) தடையில்லா சான்றிதழ் (NOC) வலை இணையதளமான www.modnoc.ncog.gov.in – ஐ, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கினார். இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே 01.03.2020 முதல் பாதுகாப்பு அமைச்சகத்தால் செயலாக்கத்திற்கு இப்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
ஒன்பது விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். வான்வழி ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் தேவைப்படுபவர்கள் அனைவரும் இந்த முழு ஆன்லைன் வசதியையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*********
(रिलीज़ आईडी: 1621245)
आगंतुक पटल : 219