தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தனது ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.764 கோடி வழங்கியது

प्रविष्टि तिथि: 05 MAY 2020 2:23PM by PIB Chennai

ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.  நாடெங்கும் அமலில் இருக்கும் கொவிட்-19 முடக்க நிலையினால் ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஓய்வூதியத்தை முன்னதாகவே அளிக்க, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் 135 கள அலுவலகங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன.

எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்து, இந்த அலுவலகத்தின் அலுவலர்களும், பணியாளர்களும், இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் வங்கிகளுக்கு ரூ.764 கோடியை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த காலத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியத்தை வரவு வைப்பதை உறுதிப்படுத்துமாறு அனைத்து வங்கிக் கிளைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


 


(रिलीज़ आईडी: 1621174) आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Assamese , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Odia , Telugu , Kannada