உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

குளிர்பதன பொருட்களுக்கான தொழில் துறையினருடன் அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்

Posted On: 04 MAY 2020 6:47PM by PIB Chennai

உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் குளிர்பதனப் பொருட்களுக்கான கோல்ட் செயின் திட்டம் எனப்படும் முழுமையான, ஒருங்கிணைந்த குளிர்பதன சங்கிலி திட்ட தொழில் துறையினருடன் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் காணொலி காட்சி மாநாடு ஒன்றை இன்று நடத்தினார். உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணைமைச்சர் திரு ராமேஸ்வர் டெலியும் கூட்டத்தில் உடனிருந்தார்.

 

இத்தகைய குளிர்பதன சங்கிலி திட்டத்தின் 38 உரிமையாளர்கள் காணொலி காட்சி மாநாட்டில் பங்கேற்றனர். கோவிட் 19 தொற்று காரணமாக தற்போது உணவுப் பொருட்களின் வழங்கு தொடர் பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான சமயத்தில், ஒருங்கிணைந்த குளிர்பதன சங்கிலி தொடரில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த வலிமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் வலியுறுத்தினார். பொது முடக்க காலத்தில், உறை நிலையில் வைக்கப்பட்ட காய்கறிகளும் பதப்படுத்தப்பட்ட பால் பொருட்களும், வழக்கமான ந்தைகளான சிற்றுண்டி சாலைகள், உணவகங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. மேலும் ஏற்றுமதி செய்வதிலும் சிரமங்கள் உள்ளன என்பது போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

மொத்த பணியாளர்களில் பாதிப்பேர் அல்லது மூன்றில் ஒரு பங்கினரை வைத்து மட்டுமே பணிகளை நடத்த வேண்டியிருப்பதால், நிறுவனங்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டுமென்று உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டனர். இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது என்றும், பொருட்கள் சந்தையில் போட்டியிட முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

 

 

  • மத்திய அமைச்சர் பின்வரும் முக்கிய பிரச்னைகள் குறித்து காணொலி மாநாட்டில் விவாதித்தார்

 

  • கச்சாப் பொருட்கள் கிடைப்பது அவற்றின் அதிகமான விலை

 

  • பொது முடக்கத்தின் காரணமாக வர்த்தக இயக்கங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

 

  • தொழிலாளர் மற்றும் போக்குவரத்து பிரச்னைகள்

 

  • பொருட்களை சேமித்து வைத்திருப்பதற்காகும் அதிகபட்ச செலவு

 

விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்பதால் ஏற்படும் பணப்புழக்க நெருக்கடி

****


(Release ID: 1621155) Visitor Counter : 235