பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று பரவல் சூழலை கருத்தில் கொண்டு 49 வகையான வன சிறு உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது

Posted On: 01 MAY 2020 7:03PM by PIB Chennai

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, வனப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் 49 வகையான சிறு பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு இன்று மாற்றியமைத்துள்ளது. இது குறித்த உத்தரவை வெளியிட்டுள்ள பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம், மத்திய அரசின் பழங்குடியின விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள விலைக் குழு, சிறு வனப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைப்பதை குறிப்பிட்டுள்ளது. எனினும், கோவிட்-19 தொற்று பரவலால் நாட்டில் தற்போது எழுந்துள்ள மிகவும் நெருக்கடியான சூழல் மற்றும் மாறுபட்ட நிலையை கருத்தில் கொண்டும், பழங்குடியின வன சிறு பொருட்கள் தயாரிப்போருக்கு மிகவும் அவசியமான உதவியை வழங்குவதற்கான உடனடி திட்டம் இருப்பதாலும், திட்டத்தின் விதிமுறைகளில் நடைமுறையில் உள்ள வழிமுறைகளை தளர்த்த அதிகார வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, இந்தத் திட்டத்தின்கீழ் வரும், வன சிறு உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, வன சிறு பொருட்கள் விலைக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, மாற்றியமைத்துள்ளது.

சிறு பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு குறித்த விரிவான தகவல்களைப் பெற இங்கே தொடர்பு கொள்ளவும்.

பல்வேறு வகையான வனப் சிறு பொருட்களின் ஆதார விலை 16 சதவீதம் முதல் 66 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டதன்மூலம், குறைந்தது 20 மாநிலங்களில் வன சிறு பொருட்களை கொள்முதல் செய்வதற்கான உடனடி மற்றும் மிகவும் தேவையான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இங்கே தொடர்பு கொள்ளவும் (MSP).

*****



(Release ID: 1620400) Visitor Counter : 163