சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பிகாரில் தீவிர மூளை அழற்சி நோய் சிகிச்சைக்கான ஆயத்த நிலை குறித்து காணொலி மூலம் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு

Posted On: 01 MAY 2020 8:22PM by PIB Chennai

தீவிர மூளை அழற்சி நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கு பிகார் மாநிலத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று உறுதி அளித்தார். பிகாரில் அத்திட்டத்தின் செயல்பாடு குறித்து, அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் திரு மங்கள் பாண்டேவுடன் காணொலி காட்சி மூலம் கலந்து பேசிய போது அமைச்சர் இந்த உத்தரவாதத்தை அளித்தார். பிகாரில் கள நிலையில் உள்ள நிலவரங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபேவும் காணொலி காட்சி மூலமான நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தீவிர மூளை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக குழந்தைகள் மரணம் அடைவது பற்றி கவலை தெரிவித்த மத்திய அமைச்சர், ``கோடையில் குறிப்பிட்ட காலத்தில், அதாவது மே 15 முதல் ஜூன் மாதம் வரையிலான நாட்களில் பிகாரில் தீவிர மூளை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மரணம் அடைவது வருத்தம் தருவதாக உள்ளது'' என்று கூறினார். பல துறைகள் மூலமாக, உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுத்தால் சின்னஞ்சிறு குழந்தைகளின் மரணத்தைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார். ``தீவிர மூளை அழற்சி நோய் பாதிப்பு நோய்க்கு எதிரான நடவடிக்கை என்பது பழகிய விஷயம், நம் அனைவருக்கம் அது பற்றி நன்கு தெரியும். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல், முறையான வழியில் நடவடிக்கைகள் எடுத்தல் ஆகியவை தான் தேவை'' என்று அவர் கூறினார். தீவிர மூளை அழற்சி நோய் பாதிப்பு காலத்தில் 2014 மற்றும் 2019ல் பிகார் மாநிலத்துக்கு தாம் சென்றது பற்றி அமைச்சர் குறிப்பிட்டார். அப்போது நிலைமையை நேரில் ஆய்வு செய்து, குழந்தை நோயாளிகளையும் அவர்களுடைய பெற்றோரையும் சந்தித்துப் பேசி, இந்த நோய்க்கான மூலகாரணத்தை கண்டறிய முற்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.


(Release ID: 1620396) Visitor Counter : 189