மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

கொரோனா பெருந்தொற்றை எதிர்ப்பதற்கு ஒருங்கிணைந்து சர்வதேச டிஜிட்டல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்: ஜி20 டிஜிட்டல் அமைச்சர்கள் மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது

Posted On: 30 APR 2020 9:37PM by PIB Chennai

ஜி20 டிஜிட்டல் பொருளாதார பணிக்குழு கோவிட்-19ன் அமைச்சர்கள் மாநாட்டு அறிக்கையானது கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கான ஒருங்கிணைந்த சர்வதேச டிஜிட்டல் முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.  தொடர்பியல் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொடர்பு வலைப்பின்னல் இணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பாதுகாப்பான முறையில் தனிநபர் சாராத தகவல் தரவை பரிமாறிக் கொள்ளுதல்,  சுகாதாரப் பராமரிப்புக்கான டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துதல், இணையப் பாதுகாப்பு நிறைந்த உலகை உருவாக்குதல் மற்றும் வர்த்தகத்தை மீண்டும் எழுச்சி பெற வைத்தல் முதலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வழக்கத்துக்கு மாறாக விசேஷமான மெய்நிகர் ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சகர்களின் கூட்டம் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ள சவால்கள் குறித்து விவாதிப்பதற்காகவும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காகவும் நேற்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக மத்திய சட்டம் மற்றும் நீதி, தொடர்பியல் மற்றும் மின்னணுவியல்,  தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் கலந்து கொண்டார்.  இந்தக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் ஏனைய 19 டிஜிட்டல் அமைச்சர்களும் அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஜி20 டிஜிட்டல் அமைச்சர்கள் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் மக்களை பாதுகாக்கவும் டிஜிட்டல் மீடியத்தின் ஆற்றலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டனர்.  மத்திய அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நெருக்கடி காலத்திற்கு பிறகு எடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகளும் தற்போதைய பெருந்தொற்று காலத்தில் துவண்டு போய் இருக்கின்ற பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை மேலும் சம வாய்ப்புள்ளதாக அனைவரையும் உள்ளடக்கியதாக மற்றும் நீடித்து நிலைத்து இருக்கும் வகையில் கட்டமைப்பதற்கு முதன்மையான கவனம் செலுத்த வேண்டும் என்று  கூறியதோடு ஜி20 நாடுகளுக்கு மிக முக்கியமான பொறுப்பு உள்ளது என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.


(Release ID: 1620001) Visitor Counter : 244