உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கோவிட் -19 தொற்றுக்கு எதிராக இந்தியாவின் போராட்டத்தை ஆதரிக்க லைஃப்லைன் உதனின் கீழ் 415 விமானங்கள் இயக்கப்படுகின்றன

Posted On: 30 APR 2020 6:54PM by PIB Chennai

ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் தனியார் விமானங்கள் மூலம் லைஃப்லைன் உதனின் கீழ் 415 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. சரக்கு விமானங்கள் மூலம் இன்று வரை கொண்டு செல்லப்படும் சரக்கு சுமார் 779.86 டன். கோவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போரை ஆதரிப்பதற்காக நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு அத்தியாவசிய மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல, உள்நாட்டு துறையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தால் இயக்கப்படும் ‘லைஃப்லைன் உதான்’ விமானங்கள், இன்றுவரை 4,07,139 கி.மீ வான்வழி தூரம் பயணித்துள்ளது.

ஏப்ரல் 29 ம் தேதி வரை 7,257 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய 2.0 டன் சரக்குகளை பவன் ஹான்ஸ் விமானம் கொண்டு சென்றுள்ளது. வடகிழக்கு மண்டலம், தீவு பிரதேசங்கள் மற்றும் மலைபிரதேச மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பவன் ஹான்ஸ் லிமிடெட் உள்ளிட்ட ஹெலிகாப்டர் சேவைகள் ஜம்மு  காஷ்மீர், லடாக், தீவுகள் மற்றும் வடகிழக்கு மண்டலங்களில் முக்கியமான மருத்துவ பொருட்கள் மற்றும் நோயாளிகளை கொண்டு செல்கின்றன. ஏர் இந்தியா மற்றும் இந்திய போர் விமானங்கள் ஜம்மு  காஷ்மீர், லடாக், வடகிழக்கு மற்றும் பிற தீவு பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தி கூட்டாக ஒத்துழைத்துள்ளன.

சர்வதேச அளவில், கிழக்கு ஆசியாவுடன் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கோவிட் -19 நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக ஒரு சரக்கு விமான தொடர்புப் பாலம் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ஏர் இந்தியா கொண்டு வந்த மருத்துவ சரக்குகளின் அளவு 729 டன்னாகும்.

**********


(Release ID: 1619995) Visitor Counter : 170