உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கோவிட் 19 நோய் மருத்துவ மற்றும் மருந்துகளை வழங்க 411 அவசரப்பணி விமானங்கள் இயக்கப்பட்டன

प्रविष्टि तिथि: 29 APR 2020 8:30PM by PIB Chennai

“கோவிட் 19” தொற்றினை எதிர்த்துப் போராடும் வகையில் அவசரப் பணிக்காக மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பொது முடக்கக் காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக 411 அவசரப்பணி விமானங்கள்  இயக்கப்பட்டன. இவற்றில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை, தனியார் சரக்கு விமானங்கள் ஆகியவை அடங்கும். ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்கள் 237 விமானங்களை இயக்கியுள்ளன. இந்த விமானங்கள் இது வரையில் மொத்தம் 776.73 டன் மருந்துகள், மருந்துப் பொருட்களை ஏற்றிச் சென்று பல்வேறு இடங்களில் வழங்குவதற்காக மொத்தம் 4,04,224 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளன. இந்த விமானங்கள் கடந்த ஏப்ரல் 28ம் தேதி மட்டும் மொத்தம் 28.05 டன் ஏற்றிச் சென்றுள்ளன.

“கோவிட் 19” தொற்றினை ஒழிக்கும் பணியில் ஈடுபடும் “அவசரப்பணி விமானங்கள்” நாட்டில் தொலைதூரப் பகுதிகளில் மருந்துப் பொருட்களை விநியோகிப்பதற்காக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் உள்நாட்டு போக்குவரத்துப் பிரிவின் கீழ்  இயக்கப்பட்டு வருகின்றன.

மருந்துகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் கோவிட் தொற்று ஒழிப்புப் பொருட்களை விநியோகிப்பதற்காக பன்னாட்டு போக்குவரத்துப் பிரிவின் கீழ் கிழக்கு ஆசிய நாடுகளுடன் சரக்குகளுக்கு வான் வழி இணைப்புப் பாலம்  அமைக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மொத்தம் 668 டன் மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

--------


(रिलीज़ आईडी: 1619895) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada