சுற்றுலா அமைச்சகம்

“இந்தியா என்று அழைக்கப்படும் ஒரு காவியம் - எண்ணற்ற கதைகளின் நிலம்” என்ற தலைப்பில் 'தேக்கோ அப்னா தேஷ்' ‘Dekho Apna Desh’ -இன் பதினொன்றாவது வலைதளத் தொடரை சுற்றுலா அமைச்சகம் வழங்குகிறது.

Posted On: 29 APR 2020 12:49PM by PIB Chennai

இந்திய அரசாங்கத்தின் சுற்றுலா அமைச்சகம், அதன் தொழில் மற்றும் பார்வையாளர்களுடன் உள்ள தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக ஏப்ரல் 28, 2020 ஆம் தேதி 'தேக்கோ அப்னா தேஷ்' (‘Dekho Apna Desh’)  -இன் பதினொன்றாவது வலைதளத் தொடரை “இந்தியா என்று அழைக்கப்படும் ஒரு காவியம் - எண்ணற்ற கதைகளின் நிலம்” என்ற தலைப்பில் வழங்கியது. இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதனை ஊக்குவிப்பதும் இந்த வலைத்தளத் தொடரின் நோக்கம் ஆகும். அதிகம் அறியப்படாத இடங்கள் பற்றியும், பிரபலமான இடங்களின் அதிகம் வெளியில் தெரியாத சிறப்பு அம்சங்களைப் பற்றியும் தெரிவிப்பது இதில் அடங்கும்.

 

இந்த ”தேக்கோ அப்னா தேஷ்” (Dekho Apna Desh) வலைத்தளத் தொடரில், இந்தியாவின் பல்வேறு இடங்களைப் பற்றி புதிய மற்றும் கேள்விப்படாத அனுபவங்களைக் கூறுவதன் மூலம், சிறந்த சுற்றுலாத்துறை வல்லுநர்கள், நகர மற்றும் பாரம்பரிய நடைப் பயிற்சியாளர்கள், கதை சொல்பவர்கள் ஆகியோரை இது ஈர்த்துள்ளது.

 

ஏப்ரல் 28, 2020 அன்று ”Rare India” நிறுவனர் திருமதி ஷோபா மோகன், பங்கேற்பாளர்களுக்கு  இந்தியாவில் இன்னும் உயிர்ப்புடன் உள்ள அதிகம் அறியப்படாத கிராமங்கள், சின்னஞ்சிறு சிற்றூர்கள் மற்றும் நகரங்களின் உண்மையான வண்ணங்கள் மற்றும் முரண்கள் பற்றியும், மரபுகள் மற்றும் பாரம்பரியம் பற்றியும், பல இடங்களையும் அனுபவங்களையும் வரலாற்றில் மூழ்கும் வித்தையுடன் சேர்த்து அறிமுகப்படுத்துகிறார்,

 

இந்த வலைத்தளத் தொடரை தவறவிட்டவர்கள், தற்போது you tube - இல் கீழ்க்காணும் இணைப்பில் கண்டு களிக்கலாம் https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured மேலும் இந்திய சுற்றலா அமைச்சகத்தின் அனைத்து வலைதளப் பக்கங்களிலும் காணலாம்.

 

வரவிருக்கும் வலைத்தளத் தொடர் “ஏப்ரல் 30, 2020 அன்று காலை 11 மணிக்கு பொறுப்புள்ள சுற்றுலாவில் நவீனப்  பெண்கள்” (New age women in responsible tourism) என்ற தலைப்பில் இடம்பெறுகிறது. இதற்கான பதிவு பின்வரும் வலைதள இணைப்பில் இப்போது திறக்கப்பட்டுள்ளது:

https://bit.ly/WebinarNewAgeWomen



(Release ID: 1619243) Visitor Counter : 222