ஜல்சக்தி அமைச்சகம்
பருவமழைக்கு உதவுகிறது ஜல் சக்தி திட்டம்
Posted On:
28 APR 2020 7:07PM by PIB Chennai
’ஜல் சக்தி திட்டம்’ தற்போதைய சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கும் அதன் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோவிட்-19 தொற்று அவசரநிலை காரணமாக கிராமப்புறங்களில் தொழிலாளர்கள் அதிகளவில் இருப்பதால், இந்த திட்டம் வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இந்த ஆண்டு வரவிருக்கும் பருவமழையின் போது நமது நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் பாதுகாப்பை அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து, ஊரக வளர்ச்சி துறை, நீர்வளத்துறை, நதி அபிவிருத்தி மற்றும் கங்கை தூய்மைப்படுத்தும் அமைப்பு, நில வளத் துறை, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை ஆகியோருடன் நடைபெற்ற முதல் கட்ட கூட்டு ஆலோசனைக்கு பின்னர், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
(Release ID: 1619197)
Visitor Counter : 248