வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த, வாரணாசி பொலிவுறு நகரத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

Posted On: 27 APR 2020 7:07PM by PIB Chennai

பொலிவுறு நகரம் வாரணாசியின்  குறிப்பிட்ட சில பகுதிகளில், பொலிவுறு நகர இயக்கத்தின் கீழ் கிருமிநாசினி தெளிக்க சென்னையைச் சேர்ந்த ‘கருடா ஏரோஸ்பேஸ் லிமிடெட்’ நிறுவனத்தை பணியமர்த்தியுள்ளது. பொது ஊரடங்கு காலத்தில், போக்குவரத்துக்கு ஓரளவே வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு, சென்னையிலிருந்து ஏர் இந்தியா சரக்கு விமானங்கள் மூலம் இந்த ட்ரோன்கள் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு அனுமதியின் பேரில், பிரத்யேகமாகக் கொண்டு வரப்பட்டன. ஏப்ரல் 17-ம் தேதி, சோதனை ஓட்டத்திற்குப் பின்னர்,  இரண்டு ட்ரோன்களுடன் மொத்தம் 7 உறுப்பினர்கள் குழு இயங்கி வருகிறது.

மாவட்ட நிர்வாகம், தலைமை மருத்துவ அதிகாரி அடையாளம் காட்டிய கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஆட்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கச் சிரமமான தனிமைப் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், காப்பகங்கள் மற்றும் இதர பகுதிகளில் தெளிக்கப்படும். ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பகுதிகள் எவை என்பது வாரணாசி நகர் நிகாம் அதிகாரிகள் குழுவால் முடிவு செய்யப்படுகிறது.

ட்ரோன்கள் பறக்கும் பாதை, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பகுதிகள், ஜிஐஎஸ் வரைபடத்துடன் கூடிய கருவியின் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்படுகிறது. இது தொலை கட்டுப்படுத்தி கருவியால் இயக்கப்படுகிறது.



(Release ID: 1618885) Visitor Counter : 226