மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

2019-ம் ஆண்டின் சிறந்த 30 ஆன்லைன் படிப்புகளுக்கான மைய வகுப்பு பட்டியலில் சுவயம் இடம் பிடித்தது

Posted On: 27 APR 2020 6:48PM by PIB Chennai

மைய வகுப்பு – (ஸ்டான்போர்ட், எம்ஐடி, ஹார்வர்ட் உள்ளிட்ட மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களிலிருந்து மூக் எனப்படும் இலவச ஆன்லைன் படிப்புகள்) 2019-ம் ஆண்டின் 30 சிறந்த ஆன்லைன் படிப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 6 படிப்புகள் சுவயம் தளத்தைச் சேர்ந்தது.

ஆன்லைன் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த தளமான, ‘இளம் லட்சிய உள்ளங்களுக்கான தீவிர கற்றல் வலைதளங்கள்’ (சுவயம்), பள்ளிகள்   (9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) முதல் முதுநிலைப் பட்டம் வரையிலான அளவில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதுவரை, மொத்தம் 2867 படிப்புகள் சுவயம் மூலம் கற்பிக்கப்படுகிறது. இதில்,568 படிப்புகள் 2020 ஜனவரி செமஸ்டருக்காக பதிவேற்றப்பட்டுள்ளது. சுமார் 57 லட்சம் (57,84,770) தன்னித்துவ பயன்பாட்டாளர்கள், சுவயம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். சுமார் 1.25 கோடி (1,25, 04, 722) பேர் சுவயம் தளத்தின் பல்வேறு படிப்புகளுக்கு பதிவு செய்துள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்குக் கற்பிப்போருக்கான ஆன்லைன் படிப்புகளையும் இது வழங்குகிறது. இதை swayam.gov.in. என்ற தளத்தில் அணுகலாம்.

சுவயம் தளத்தின் பின்வரும் படிப்புகள் 2019-ன் சிறந்த ஆன்லைன் படிப்புகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

  1. அகடமிக் ரைட்டிங்; எச்.என்.பி கார்வல் பல்கலைக்கழகம் (ஒரு மத்திய பல்கலைக் கழகம்) , ஶ்ரீநகர் கார்வல்
  2. டிஜிடல் மார்க்கெட்டிங்; பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
  3. அனிமேசன்ஸ்; பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
  4. கணிதப் பொருளாதாரம்; டூன் பல்கலைக்கழகம், டேராடூன்
  5. பைதான் பார் தரவு அறிவியல்; ஐஐடி,சென்னை
  6. இளம் சிறார் கவனிப்பு மற்றும் கல்வி (ECCE); அவினாசிலிங்கம் மனையியல் அறிவியல் மற்றும் மகளிருக்கான உயர் கல்வி நிறுவனம், கோவை


(Release ID: 1618884) Visitor Counter : 180