அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் முகக்கவசங்களுக்கு கரிமம் மற்றும் கரிமமல்லாத நானோ பூச்சுகள்: கோவிட்-19 தொற்றுக்கு எதிரான வலுவான ஆயுதம்

Posted On: 26 APR 2020 6:28PM by PIB Chennai

அறிவியல் தொழில்நுட்பத் துறை நானோ இயக்கத்தின் கீழ் பெங்களூருவில் செயல்படும் ஜோதி தொழில்நுட்ப நிறுவனத்தின் டாக்டர் ஆர். விஸ்வநாதா உருவாக்கியுள்ள கரிமம் மற்றும் கரிமமல்லாத நானோ பூச்சுகள் கொண்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான உதவியை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அனுமதித்துள்ளது.

இந்தக் கவசம் தயாரிப்பதற்கு சொல்-ஜெல் நானோ தொழில்நுட்பத்தை டாக்டர்.ஆர் விஸ்வநாதா பயன்படுத்தி உள்ளார்.  மருத்துவ முகக்கவசங்களுக்கு தான் புதிதாகத் தயாரித்த நானோ பூச்சுகளை பூசி அவற்றின் நோய் எதிர்ப்புத் திறனை நிரூபித்துக் காட்டுவதோடு. இந்தத் தொழில்நுட்பத்தை தொழிற்சாலை உற்பத்திக்கு ஏற்ற வகையில் மாற்றித் தருவதற்கான ஒரு செயல் திட்டத்தையும் அவர் உருவாக்கித் தருவார். 



(Release ID: 1618649) Visitor Counter : 131