குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு வெளிநாட்டு இந்திய மாணவர்களிடம் நிதின் கட்கரி வலியுறுத்தல்

Posted On: 26 APR 2020 10:46PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, கடந்த சில நாட்களாக பல்வேறு பிரிவினர் மற்றும் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருடன் இணைய கருத்தரங்கு, காணொலி காட்சி மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாகக் கலந்துரையாடும் மிகப்பெரிய பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த ஊடகங்கள் மூலமான அவரது கலந்துரையாடல் சுமார் 1.30 கோடி மக்களைச் சென்றடைந்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், இதர ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுடனும் அவர், உலக தொற்று மீட்பில் இந்தியா- இந்தியாவுக்கான வழிகாட்டி திட்டம் என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு கலந்துரையாடினார்.

மாணவர்களிடம் உரையாற்றிய அவர், இந்தியா ஆக்கபூர்வமான முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பது பற்றிய சிந்தனை நம்மிடம் தெளிவாக உள்ளது என்றும், இந்த நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நாம் ஒன்றுபட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக முன்னேறிச் செல்லும் அதேசமயம், கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், சுகாதாரம் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் நாம் பின்பற்றுவது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

22 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக திரு. கட்கரி குறிப்பிட்டார்.



(Release ID: 1618646) Visitor Counter : 144