சுற்றுலா அமைச்சகம்

”லக்னோவின் பெருமை – அவாத் சுற்றிப்பாருங்கள்” என்ற சமையல்கலை சுற்றுலாவுக்கான எதிர்கால வாய்ப்புகளை “நமது தேசத்தைப் பாருங்கள்” இணைய தொடர்

புதுச்சேரியின் பிரெஞ்ச் பகுதியைச் சுற்றிப் பார்த்தல் – பிரெஞ்ச் தொடர்புகள் என்ற தலைப்பிலான அடுத்த இணைய தொடர் 27 ஏப்ரல் 2020ல் நடைபெறும்

Posted On: 26 APR 2020 12:15PM by PIB Chennai

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற மையக்கருத்தில் இணைய தொடர்களை நடத்தி வருகிறது.  ஏப்ரல் 25 ம் தேதி அன்று  ” லக்னோவின் பெருமை - அவாத் சுற்றி பாருங்கள்–” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட தொடரில் சமையல்கலை சுற்றுலாவுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து எடுத்துக்காட்டப்பட்டது. வரலாறு, ஜவுளி, லக்னோவின் மான்புகள், மரபுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சில கதைகளை இழைகளாகக் கொண்டு  லக்னோவின் வியப்பூட்டும் பலவகைப்பட்ட சமையல் பராம்பரியத்தை இந்த இணைய தொடர் வெளிப்படுத்தியது

பிரபலமான எளிய காலை உணவு வகைகளில் தொடங்கி பகட்டான தம் முறை சமையல், நாவூறும் கபாப் மற்றும் குரூமா, பிரியாணி மற்றும் ஷீர்மால், சாலையோர உணவு வகைகள் என பலவகையான உணவு வகைகளை இந்த இணைய தொடர் எடுத்துக்காட்டியது.

சுற்றுலா அமைச்சகத்தின் இணைய தொடர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்களை கவர்கிறது.  சராசரியாக 3,000க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்கின்றனர்.  இந்த தொடர்கள் இப்பொழுது https://www.youtube.com/channel/UCzIbBmMvtvH7d6Zo_ZEHDA என்ற யூடியூப் முகவரியில் பார்க்க கிடைக்கிறது. மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சமூக ஊடக  இணையங்களிலும் தொடர்களைப் பார்க்கலாம். 

இணைய தொடரில் அடுத்ததாக “புதுச்சேரியின் பிரெஞ்ச் பகுதியைச் சுற்றிப் பார்த்தல் – பிரெஞ்ச் தொடர்புகள்” என்ற தலைப்பில் வரும்ஏப்ரல் 27 ம் தேதி காலை 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது.  https://bit.ly/WebinarPondicherry என்ற முகவரியில் பதிவு செய்து கொண்டு இதில் பங்கேற்கலாம்.


(Release ID: 1618395) Visitor Counter : 206