பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தில்லி ஹெரிட்டேஜ் சுழற்சங்கம் பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் இணைந்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 50,000 முகக்கவசங்களை வழங்கியது. பத்திரிகை தகவல் அலுவலக முதன்மைத் தலைமை இயக்குனர் முகக்கவசங்களை விநியோகித்தார்

Posted On: 25 APR 2020 3:55PM by PIB Chennai

தற்போதைய கோவிட் நெருக்கடி சமயத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரணப்
பொருட்களை வழங்கி உதவுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி
கேட்டுக்கொண்டதற்கு இணங்க, டில்லி ஹெரிட்டேஜ் சுழற்சங்கம் பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் இணைந்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுமார் 50,000 முகக்கவசங்களை வழங்கியுள்ளது.


உலகெங்கும் நல்லெண்ணத்தையும் அமைதியையும் மேம்படுத்துவதற்கு மனிதாபிமான சேவைகளை வழங்குவதில் வர்த்தக மற்றும் தொழில்துறைத் தலைவர்களை ஒருங்கிணைத்து பணியாற்றிவரும் சர்வதேச அமைப்பு சர்வதேச சுழற்சங்கம் எனப்படும் ரோட்டரி இன்டர்நேசனல் ஆகும். இச்சங்கம் வழங்கியுள்ள முகக்கவசங்கள் முழு அடைப்புக் காலத்தில் பெண் தையல் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே தயாரித்தவை ஆகும்.


பத்திரிகை தகவல் அலுவலக முதன்மைத் தலைமை இயக்குனர் திரு குல்தீப் சிங் தட்வாலியா முகக்கவசங்களை விநியோகித்தார். இந்த நிகழ்ச்சியை தில்லி ஹெரிடெஜ் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் முதன்மைத்   தலைமை இயக்குனர் திரு ராஜிவ் ஜெயின் மற்றும் ரோட்டரி ஹெரிடேஜ் தலைவர் திரு ராகேஷ் ஜெயின் ஒருங்கிணைத்து நடத்தினர். தில்லி காவல் துறையின் பார்லிமெண்ட் தெரு துணை ஆணையாளர் திரு ஐஷ் ஷிங்கால், கேந்திரிய பண்டார் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு.முகேஷ் குமார் ஆகியோர் இன்று தேசிய ஊடக மையத்தில் இந்தக் கவசங்களைப் பெற்றுக் கொண்டனர். முன்னதாக , முதன்மைத் தலைமை இயக்குனர், பத்திரிகையாளர்களுக்கு முகக் கவசங்களை வழங்கினார் .
 



(Release ID: 1618200) Visitor Counter : 177