சுற்றுலா அமைச்சகம்

“நமது தேசத்தைப் பாருங்கள்” தொடரின் 8ஆவது வெபினார் தொடரில், “வடகிழக்கு இந்தியா – பிரத்யேக கிராமங்களின் அனுபவம் என்ற கருத்திலான நிகழ்ச்சியை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

Posted On: 25 APR 2020 2:27PM by PIB Chennai

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற மையக்கருத்தில் வெபினார் தொடர்களை நடத்தி வருகிறது.  “வடகிழக்கு இந்தியா – பிரத்யேக கிராமங்களின் அனுபவம்” என்ற கருத்திலான 8வது வெபினார் நேற்று (24 ஏப்ரல் 2020) நடைபெற்றது.  இதில் அசாம், மேகாலயா மாநிலங்களில் உள்ள வெளி உலகத்திற்குத் தெரியாத கிராமங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

வடகிழக்கு இந்தியா என்பது நேர்த்தியான அழகு நிறைந்த நிலப்பரப்பாகும்.  பசுமை போர்த்திய நிலக்காட்சி, நீலநிற நீர் நிலைகள், புராதனமான அமைதி, நீண்டு கொண்டே இருக்கும் நிலப்பரப்பு மற்றும் கவர்ந்திழுக்கும் உள்ளூர் மக்கள் ஆகியவை கலந்த பிரதேசமாக இது விளங்குகிறது.  இதன் வித்தியாசமான புவியியல் அமைப்பு, இட அமைப்பியல், பலவகைப்பட்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மக்களின் வரலாறு, பலவகையான இனக்குழுக்கள், அவர்களின் பழமையான மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகளின் செறிவான பாரம்பரியம், திருவிழாக்கள், கைவினைக்கலைகள் ஆகியன எல்லாம் சேர்ந்து சுற்றுலாவுக்கான அற்புதமான இடமாக இந்தப் பிரதேசங்களை மாற்றி வைத்துள்ளன.  இங்கு வருபவர்கள் இவற்றைத் தாமே புதியதாக கண்டுபிடித்தது போன்ற உணர்வைப் பெறுவார்கள்..

வடகிழக்குப் பிராந்தியத்தின் ஆச்சரியமூட்டும் பன்முகத் தன்மையானது, இதனை எல்லாப் பருவகாலங்களுக்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.

கோயேலி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் (பி) லிமிடெட்டின் முதன்மைச் செயல்அதிகாரி திரு. அரிஜித் பூர்கயஸ்தா மற்றும் லேன்ட்ஸ்கேப் சஃபாரி நிறுவனத்தின் முதன்மை இயக்குதல் அதிகாரி டாக்டர் ஸ்ரேயா பார்பரா ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருந்தனர். வெபினாரின் சிறப்பம்சங்களில் அசாம், மேகாலயாவின் கிராமங்கள் பற்றிய காட்சிகளும் உள்ளடங்கியிருந்தன.

இந்தியாவின் நிலக்காட்சி, நகரங்கள் மற்றும் இதர அனுபவங்களை வெபினார்களாக எடுத்துக்காட்டும் அமைச்சகத்தின் முயற்சிகள் ‘Incredible India’ வின் யூ-டியூப் சானலிலும் பார்ப்பதற்குக் கிடைக்கின்றன. அதே போன்று அமைச்சகத்தின் www.incredibleindia.org மற்றும்  www.tourism.gov.in ஆகிய வலைத்தளங்களிலும் பார்க்கலாம்.

“வடகிழக்கு இந்தியா – பிரத்யேக கிராமங்களின் அனுபவம்” குறித்த வெப்னாரில் 3654 பேர் பங்கேற்றனர். அதேபோன்று  ஆப்கானிஸ்தான்,  கனடா,  பிரான்ஸ்,  ஜெர்மனி,  பாகிஸ்தான்,  சிங்கப்பூர்,  ஸ்பெயின்,  தாய்லாந்து,  யுனைடெட் கிங்டம்,  அமெரிக்கா போன்ற பத்து நாடுகளில் இருந்தும் மக்கள் இதில் பங்கேற்றனர்:



(Release ID: 1618168) Visitor Counter : 155