தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கோவிட் -19 தொற்று மாதிரிகளை பரிசோதிக்கும் முதல் மொபைல் ஆய்வை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
Posted On:
23 APR 2020 6:46PM by PIB Chennai
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், கோவிட்-19 தொற்று மாதிரிகளை சேகரிப்பதற்காக நாட்டின் முதல் மொபைல் ஆய்வகத்தை காணொலி காட்சி மூலம் நாட்டிற்கு அர்ப்பணித்தார், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புக்கான மாநில அமைச்சர், திரு ஜி. கிஷன் ரெட்டி, உள்துறை அமைச்சர், திரு கே.டி. ராம ராவ், தெலுங்கானா அரசின், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர வளர்ச்சி, கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், மற்றும் தெலுங்கானா அரசின், திரு சாமகுரா மல்லா ரெட்டி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோரின் முன்னணியில் இந்த ஆய்வகம் இன்று புதுதில்லியில் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வகத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஹைதராபாத் சனாத் நகரின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து, தெலுங்கானாவின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உரிய அனுமதியுடன் உருவாக்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், உயிரை பாதுகாக்ககூடிய இந்த இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்ட ஆய்வகத்தை அமைக்க ஆறு மாத காலம் ஆகும் என்றும் இதை வெறும் 15 நாட்களில் அமைத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் அரசு தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். இந்த பரிசோதனை வசதி மூலம் ஒரு நாளில் 1,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதிக்க முடியும் என்றும் கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதில் நாட்டின் திறனை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
****************
(Release ID: 1617802)
Visitor Counter : 150