உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உயிர்காக்கும் உடான் விமான சேவைகள் மூலம் 2020 ஏப்ரல் 22 வரையில் 35.78 டன்கள் அளவுக்கு அத்தியாவசிய மற்றும் மருந்துப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 23 APR 2020 7:20PM by PIB Chennai

ஏர் இந்தியா, இந்திய விமானப் படை மற்றும் விஸ்தாரா ஆகியவற்றால் இயக்கப்படும் உயிர்காக்கும் உடான் விமானச் சேவைகள் மூலம் 2020 ஏப்ரல் 22ஆம் தேதி வரையில் 35.78 டன்கள் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கோவிட்-19 நோய்த்தொற்று சூழ்நிலையில், உதவிகள் அளிக்கும் வகையில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் 339 விமானச் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.  இவற்றில் 204 சேவைகள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் மூலம் இயக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை 587.57 டன்கள் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.  இந்த விமானச் சேவைகள் மூலம் இதுவரை 3,37,639 கிலோ மீட்டர் அளவுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. `உயிர்காக்கும் உடான்' விமானச் சேவைகளை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்கி வருகிறது. கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் அரசின் முயற்சிகளுக்கு உதவும் வகையில், தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்ல இந்தச் சேவைகள் இயக்கப்படுகின்றன.

ஏப்ரல் 4, 2020இல் இருந்து இதுவரையில் கிழக்கு ஆசியாவில் இருந்து 348 டன்கள் அளவுக்கு மருந்துப் பொருள்களை ஏர் இந்தியா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. பார்மசூட்டிகல் பொருள்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் கோவிட்-19 நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல கிழக்கு ஆசியாவுடன் சரக்கு ஏர்-பிரிட்ஜ் உருவாக்கப்பட்டுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1617758) வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , Telugu , English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi