எரிசக்தி அமைச்சகம்
கோவிட் 19 தொற்று தாக்குதலின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான பொதுமுடக்கக் காலத்தின் போது மின் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய மின் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
Posted On:
23 APR 2020 2:47PM by PIB Chennai
கோவிட் 19 நோய் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான ஊரடங்கு காலத்தின்போது, ஏப்ரல் 15ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி, முனிசிபல் வரையறைக்கு வெளியேயுள்ள மின் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்குமாறு, மாநில/ யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு, மத்திய மின் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கோவிட் 19 தொற்று தடுப்புக்கான, தேவையான சுகாதார நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்ட பிறகு, இந்தச் செயல்பாடுகள் அனுமதிக்கப்படலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏப்ரல் 15 தேதி இடப்பட்ட ஆணை எண் Order No. 40-3/2020- DM-I(A) ன்படி வெளியிடப்பட்ட விதிமுறைகளின் பத்தி 16( 1) இன் படி, ஏப்ரல் 20 முதல், கிராமப்புறங்களில் அதாவது முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் முனிசிபாலிட்டிகளின் வரையறைகளுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தொழில் திட்டங்களுக்கான அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், டி எம்DMs, காவல்துறை அதிகாரிகள், முனிசிபல் அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 20ம் தேதியன்று அனுப்பிய தகவல் தொடர்பில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வரையறைக்கு வெளியே மேற்கொள்ளப்படும் அனல் மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட பணிகள் தொடர்பான, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும் இது பொருந்தும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணையின்படி, தற்போது கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும், மின் திட்டங்களுக்கு தேவையான கட்டுமானப் பொருட்கள், கருவிகள், உதிரிபாகங்கள், நுகர் பொருட்கள், ஆகியவற்றை மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்குள்ளேயும் போக்குவரத்து மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த திட்டப்பணிகள் மீண்டும் தொடரப்படும் போது, கட்டாயமாக, சட்டரீதியாக, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள், சமூக விலகியிருத்தலுக்கான விதிமுறைகள் மற்றும் கோவிட் 19 நோய் தொடர்பாக அவ்வப்போது மத்திய உள்துறை அமைச்சகமும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும் வெளியிடும் அறிவுறுத்தல்கள் ஆகியவை பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது
மின்சாரம் தொடர்பான அனைத்து ஆகியவற்றில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கருவிகள் மற்றும் கோவிட் 19 நோய்க்கு எதிரான இதர பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு இந்நிறுவனங்களின் அனைத்து தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்களையும், மின் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
(Release ID: 1617514)
Visitor Counter : 202
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam