தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தொலைத்தொடர்பு துறை இலவச இணைய சேவையை அளிக்கவில்லை
Posted On:
22 APR 2020 9:10PM by PIB Chennai
அனைத்துப் பயனர்களுக்கும் 3 மே, 2020 வரை இலவச இணைய சேவையை தொலைத்தொடர்பு துறை அளிக்கவில்லை என்று பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு சுட்டுரை ஒன்றில் இன்று தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பதற்காக இலவச இணைய சேவையை தொலைத்தொடர்பு துறை அனைவருக்கும் வழங்குகிறது என்றும், ஒரு குறிப்பிட்ட சுட்டியை அழுத்தினால் அதைப் பெறலாம் என்றும் ஒரு தவறான தகவல் உலா வந்தது. அந்தத் தகவல் பொய்யானது என்றும், அந்தச் சுட்டி மோசடியானது என்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு தெரிவித்துள்ளது.
https://twitter.com/PIBFactCheck/status/1252933594579824643?s=20
இதற்கிடையே, ஊழியர்களுக்கு கொவிட் -19 தொற்று கண்டறியப்பட்டால், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வந்த ஊடகச் செய்திகளில் உண்மை இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேலையில் அமர்த்துபவரின் ஒப்புதலோடும், அவருக்கு தெரிந்தோ அல்லது கவனக்குறைவாலோ குற்றம் நடந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்படலாம் என வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. இது குறித்த பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவின் சுட்டுரையை கீழே காணலாம்.
https://twitter.com/PIB_India/status/1252861361777897472?s=20
உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரின் விளக்கம் கீழ்கண்ட சுட்டுரையில் காணலாம்.
https://twitter.com/PIBHomeAffairs/status/1252897072526704640?s=20
கொரோனா வைரஸ் பரவலால் அனைத்து உணவகங்களையும் 15 அக்டோபர், 2020 வரை மூடி வைக்குமாறு கேட்டுக்கொண்டு சுற்றுலா அமைச்சகம் கடிதம் அனுப்பவில்லை என்று மீண்டும் ஒரு முறை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு தனது இன்னொரு பதிலில் தெளிவுபடுத்தியுள்ளது.
https://twitter.com/PIBFactCheck/status/1252888187363442689?s=20
உள் நாட்டு அஸ்ஸாம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை என்று பத்திரிகை தகவல் அலுவலகத்தின் அஸ்ஸாம் பிராந்தியப் பிரிவு தெரிவித்துள்ளது. உள் நாட்டு அஸ்ஸாம் மக்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தி காரணாமாக கொவிட் 19ஆல் பாதிக்கப்படவில்லை என்றும், அவர்களது மரபணுக்களைக் குறித்து ஆய்வு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தை இந்த தகவல் தூண்டியுள்ளது எனக் கூறிய சுட்டுரைக்கு, உண்மையை கண்டறிந்து பதிலளிக்கும் விதமாக அஸ்ஸாம் பிராந்தியப் பிரிவு இந்த சுட்டுரை அமைந்தது. https://twitter.com/PIB_Guwahati/status/1252932862971707392?s=20
***
(Release ID: 1617403)
Visitor Counter : 154