கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

இந்தியத் துறைமுகங்களில், இந்தியக் கப்பல் பணியாளர்கள் பணியேற்கச் செல்லும் போதும், பணி முடித்து வெளியேறும் போதும் செய்யவேண்டியவை மற்றும் அவர்களின் நடமாட்டம் குறித்த நிலையான விதிமுறைகள் ( SOP) வெளியிடப்பட்டுள்ளன.

Posted On: 22 APR 2020 1:28PM by PIB Chennai

இந்தியத் துறைமுகங்களில், இந்தியக் கப்பல் பணியாளர்கள் பணியேற்கச் செல்லும் போதும், பணி முடித்து வெளியேறும் போதும் செய்யவேண்டியவை பற்றிய இயக்கத் தர விதிமுறைகள்  (Standard Operating Procedure - SOP) வெளியிடப்பட்டிருப்பதை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மன்சுக் மண்டவியா வரவேற்றுள்ளார். கடல் துறைமுகங்களில், கப்பல் பணிக் குழுவினரை மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையிலான ஆணையை வெளியிட்டதற்காக மத்திய உள்துறை அமைச்சருக்கு அவர் ட்வீட் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான கப்பல் பணியாளர்களின் சிரமங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் கூறினார்.

வர்த்தகக் கப்பல்களை இயக்குவதற்கு, கப்பல் பணியாளர்களை மாற்றுவது என்பது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். இதற்கான இயக்க முறைகளுக்கான நிலைத்த விதிமுறைகளை, (SoP) மத்திய உள்துறை அமைச்சகம் 21 ஏப்ரல் 2020 அன்று வெளியிட்டது. இந்தியத் துறைமுகங்களில், இந்தியக் கப்பல் பணியாளர்கள் பணியேற்கச் செல்லும் போதும் மற்றும் பணி முடித்து வெளியேறும் போதும் செய்ய வேண்டியனவற்றை முறைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டன..

வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் வருமாறு:

I. பணியேற்கச் செல்லும் போது செய்ய வேண்டியவை:

i.              ஒரு கப்பலில் சேர்வதற்கான இந்தியக் கப்பல் பணியாளர்களை கப்பல் உரிமையாளர்/ பணி நியமன சேவை முகமை (RPS) கண்டறியலாம்.

ii.             கப்பல் பணியாளர்கள் தாங்கள் கடந்த 28 நாட்களில் மேற்கொண்ட பயண விவரங்களையும், தாங்கள்  யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரத்தையும், அவர்களுடைய கப்பல் உரிமையாளர்/ ஆர்பிஎஸ் முகமைக்கு, கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குரகம் (DGS) வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

  1. . இயக்குநரகத்தால் (DGS ஆல்) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதகர் மூலமாக கப்பல் பணியாளர் இதற்கான வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் படி பரிசோதிக்கப்பட வேண்டும். அதே சமயம் கடந்த 28 நாட்களில் அவரது பயணம் மற்றும் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றிய விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு கோவிட்-19 நோய் அறிகுறி இல்லாமல் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் வகையிலான பரிசோதனையும் நடத்தப்பட வேண்டும். மற்ற விதத்தில் அவர் பணிக்கு ஏற்றவராக இருக்கும் பட்சத்தில் அவர் பணியேற்கச் செய்வதற்கான முறைகளைத் தொடரலாம்.

iv.            அந்தக் கப்பல் பணியாளர் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு கப்பலில் ஏறிச் செல்வதற்கான இடம் வரை செல்வதற்கான இடப்பெயர்வு அனுமதிச் சீட்டு (Transit Pass) அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர், பணியேற்கத் தகுதியானவர் என்ற விவரம், அவர் வசிக்கும் இடத்தில் உள்ள பகுதியில் உள்ள உள்ளாட்சி அதிகாரிக்கு தெரியப்படுத்தப்படும்.

v.             இந்த இடப்பெயர்வு அனுமதிச் சீட்டு கப்பல் பணியாளர் வசிக்கும் இடத்தின் மாநில/ யூனியன் பிரதேச அரசால், கப்பல் பணியாளருக்கும், ஒரு ஓட்டுநருக்கும் வழங்கப்படலாம்.

vi. புறப்படும் இடம், சென்று சேருமிடம், தெளிவான வழித்தடம், செல்லுபடியாகும் காலம் ஆகிய அனைத்தும் இடப்பெயர்வு அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட வேண்டும். இடப்பெயர்வு அனுமதிச் சீட்டில் உள்ள விவரங்கள் மிகச் சரியாக பின்பற்றப்பட வேண்டும். இடப்பெயர்வு அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள வழித்தடத்தில் அவர்கள் பயணிப்பது மாநில/ யூனியன் பிரதேச அதிகாரிகளால் அனுமதிக்கப்படும். இடப்பெயர்வு அனுமதிச் சீட்டு மதிக்கப்படும்.

vii. கப்பல் பணியாளரை அவர் புறப்படும் இடத்தில் இருந்து அவர் சென்று சேர வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் வாகனம், சமூக விலகியிருத்தல், இதர தூய்மை நடவடிக்கைகள் சுகாதார ஒப்பந்த ரங்களின் படி பின்பற்ற வேண்டும்

viii. கப்பலில் ஏறுவதற்கான துறைமுகத்தில் கப்பல் பணியாளரை கோவிட்-19 நோய்க்கான பரிசோதனை செய்யவேண்டும். அந்தப் பரிசோதனை முடிவில், அவருக்கு கோவிட்-19 நோய் இல்லை என்று தெரிய வந்தால் மட்டுமே, அவர் பணியேற்கத் தயாராக முடியும். இல்லை என்றால், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

  1. பணி முடித்து வெளியேறும் போது

வெளிநாட்டுத் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல் அல்லது இந்திய துறைமுகங்கள் எதிலும் இருந்து வரும் கடற்படை கப்பல், எதுவாயினும், அந்தக் கப்பல், இந்தியத் துறைமுகத்தை வந்தடைந்தால், அந்தக் கப்பலின் மாஸ்டர் கப்பலில் உள்ள ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்தும் உறுதி செய்து கொண்டு துறைமுக அதிகாரிகளுக்கும், துறைமுகத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கும் கடலோடுதல் சார்ந்த சுகாதார அறிவிக்கையை (Maritime Declaration of Health) சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர துறைமுகத்தின் உள்ளே உள்ள சுகாதார அதிகாரிகள் கேட்கக்கூடிய உடல் சூடு அட்டவணை, தனிநபர் சுகாதார அறிக்கை, போன்ற தகவல்களையும் கப்பலின் மாஸ்டர் துறைமுக சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அளிக்கவேண்டும். துறைமுகத்தில் கப்பலை நிறுத்துவதற்கு முன்னால் அங்கு நிறுத்திக்கொள்ளலாம் என்று தேவையான சுகாதார ஒப்பந்தங்களின் படி சுகாதார அதிகாரிகள் கப்பல் துறைமுகத்தில் நுழைவதற்கு அனுமதி (pratique) வழங்கலாம்.

  1. கப்பல் மூலம் வந்து சேரும் இந்தியக் கப்பல் பணியாளர், அவருக்கு கோவிட்-19 நோய் இல்லை என்பதற்கான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். கப்பலில் இருந்து இறங்கிய பிறகு, அந்தக் கப்பல் பணியாளர், துறைமுக வளாகத்திற்குள்ளேயே உள்ள பரிசோதனை மையத்தை சென்றடையும் வரையில், அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சுகாதார ஒப்பந்தத் தரங்களின்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதை கப்பல் உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும்.
  2. கப்பல் பணியாளரின் பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர் துறைமுக/ மாநில சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் தனிமைப்படுத்தப்படும் வசதி கூடத்தில் வைத்திருக்கப்பட வேண்டும்
  3. . பரிசோதனை முடிவுகளில் கப்பல் பணியாளருக்கு கோவிட்-19 நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சக விதிமுறைப்படி அவர் நடத்தப்பட வேண்டும்.

v. கப்பல் பணியாளருக்கு கோவிட்-19 நோய் இல்லை என்று தெரியவந்து, அவர் பணி முடித்து வெளியேறும் போதுசெய்யப்பட்டு விட்டால், அவர் இறங்கிய இடத்திலிருந்து அவர் வசிக்கும் இடத்திற்கு செல்வதற்கான இடப்பெயர்வு அனுமதிட்டு வழங்குவதற்காக, அவர் கப்பலில் இருந்து இறங்கிய பகுதியில் உள்ள உள்ளாட்சி அதிகாரிக்கு, அவர் பணி முடித்து வெளியேறும் போதுசெய்யப்பட்டு விட்டார் என்ற விவரம் அனுப்பப்படும்.  

vi. சாலை மார்க்கமாக கப்பல் பணியாளரும், ஒரு ஓட்டுநரும் செல்வதற்கான இடப்பெயர்வு அனுமதிட்டு, கப்பல் பணியாளர் இறங்கிய இடத்தில் உள்ள மாநில/ யூனியன் பிரதேச அரசால் ழங்கப்படலாம்.

vii. புறப்படும் இடம், சென்று சேருமிடம், அதற்கான வழித்தடம், செல்லுபடியாகும் காலம் ஆகியவை கொண்ட இந்த இடப்பெயர்வு அனுமதிட்டில் உள்ளவை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். இந்த வழித்தடத்தில் பயணம் மேற்கொள்வதற்கு மாநில/ யூனியன் பிரதேச அதிகாரிகளின் அனுமதி வழங்கப்படும். இந்த இடப்பெயர்வு அனுமதிட்டு மதிக்கப்படும்.

viii. கப்பல் பணியாளரை, அவர் புறப்படும் இடத்திலிருந்து, அவர் சென்றடையும் இடத்திற்கு ஏற்றிச்செல்லும் வாகனம், சுகாதார ஒப்பந்தங்களின் விதிமுறைத்ங்களின் படி, சமூக விலகியிருத்தல் மற்றும் இதர தூய்மை விதிகளைப் பின்பற்ற வேண்டும்.



(Release ID: 1617157) Visitor Counter : 397