சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ரத்தம் தானம் செய்யும் தன்னார்வலர்களை அணிதிரட்டுவது, நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனங்கள், வசதிகள், ரத்தம் செலுத்துவதற்குப் போதுமான ரத்தம் கையிருப்பை வைத்திருக்கவும்: ஹர்ஷ் வர்தன் கோரிக்கை

Posted On: 21 APR 2020 9:14PM by PIB Chennai

நாடெங்கிலும் இருந்து கலந்து கொண்ட செஞ்சிலுவை சங்க வீரர்களை புதுதில்லி நிர்மான் பவனில் இன்று நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் வாழ்த்தி வரவேற்றார். அவர்களிடையே பேசிய அமைச்சர், கோவிட் 19 தொற்றைக் கையாள அரசால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். ஒடிஷா, தமிழ்நாடு, ஹரியானா, ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், தெலங்கானா, தில்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் இந்திய செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள், தங்கள் கிளைகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கினர். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர்.கே. ஜெயின், காணொலி காட்சியில் நேரடியாக பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர், "நேரத்தை சிறிதும் வீணடிக்காமல், கோவிட் 19 தொற்று சிக்கலுக்கு உலகத்திலேயே முதலில் பதிலடி கொடுத்த நாடு இந்தியாதான் என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். முதல் முறையாகசீனா கொரோனா வைரஸ் குறித்து உலகத்துக்கு தெரிவித்த போது, இந்தியா தான் செயல்திறனோடு அதற்கு எதிர்வினை ஆற்றியது. நிலைமையை கண்காணிக்கும் நடவடிக்கைகளை அதற்கு அடுத்த நாளே எடுத்த இந்தியா, முதல் கூட்டு கண்காணிப்பு குழு கூட்டத்தையும் நடத்தியது. நிலைமைக்கு ஏற்றவாறு முக்கிய முடிவுகளை எடுக்க, எனது தலைமையின் கீழ் ஒரு அமைச்சர்கள் குழுவையும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அமைத்தார். ஆட்கொல்லி வைரசுக்கு எதிராக அதிக வீரியமுள்ள ஒரு போருக்கு நாடு முழுவதும் அடித்தளம் அமைக்க இது போதுமானதாக இருந்தது," என்றார்.

தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவித்தும் ரத்த கொடையாளிகளுக்கு அழைத்து செல்லும் மற்றும் திரும்பகொண்டுவிடும் வசதிகளை அளித்தும் ரத்த மாற்றத்துக்காக போதுமானரத்த கையிருப்பை வைத்திருக்குமாறு அவர்களை அவர் வலியுறுத்தினார். இந்த மாதிரியானசமயங்களில் ரத்த தானம் செய்வதற்கு ரத்த கொடையாளிகளை ஊக்குவிக்க அவர்களின் இடங்களுக்கே நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனங்களை அனுப்புமாறும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்குமாறு மாநில சுகாதார அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருப்பாதாக மத்திய அமைச்சர் கூறினார்.

***



(Release ID: 1617031) Visitor Counter : 206