உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான பொது முடக்கத்திலிருந்து கூடுதலாக வேளாண்மை, வனப்பிரிவு நடவடிக்கைகள், மாணவர்களுக்கான கல்வி புத்தகங்கள் விற்பனை கடைகள், மின் விசிறி விற்பனை கடைகளுக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு

Posted On: 21 APR 2020 10:54PM by PIB Chennai

மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகள் தொகுப்பின்கீழ், சில நடவடிக்கைகளுக்கு  விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தேசிய அளவிலான பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தொகுக்கப்பட்ட விதிமுறைகளில் மாற்றங்களை செய்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. 

மேலே குறிப்பிட்ட திருத்தியமைக்கப்பட்ட விதிகளின் தொகுப்பில்,  மேலும் சில விதிவிலக்குகளை அரசு அளித்துள்ளது. அதன்படி, கூடுதலாக வேளாண்மை மற்றும் வனத்துறை நடவடிக்கைகள், மாணவர்களுக்கான கல்வி புத்தகங்கள் விற்பனை கடைகள், மின்விசிறி விற்பனை கடைகள் ஆகியவற்றுக்கு பொது முடக்க கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய துறைமுகங்களில் இந்திய கடல் மாலுமிகளுக்கு பயணத்தை தொடங்குவது / பயணத்தை முடிப்பது மற்றும் அவர்களது இயக்கங்களுக்கான எச்சரிக்கை செய்தியையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட விலக்குகள், தீவிர நோய்த் தொற்று உள்ள பகுதிகள் / கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு பொருந்தாது. இந்த மண்டலங்களில் இந்தப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

 



(Release ID: 1617023) Visitor Counter : 197