உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கோவிட்-19 –தொற்றுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நாடு முழுவதும் 541 டன் மருத்துவ சரக்குகளை கொண்டு சென்றது லைஃப்லைன் உதான் விமானங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 21 APR 2020 2:15PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதற்காக நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு அத்தியாவசிய மருத்துவ சரக்குகளை கொண்டு செல்ல ‘லைஃப்லைன் உதான்’ விமானங்கள் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தால் இயக்கப்படுகின்றன. கோவிட் -19 தொற்றால் ஏற்பட்டுள்ள தேசிய  பொது முடக்கத்தின் போது, லைஃப்லைன் உதானின் கீழ் 316 விமானங்களை ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இயக்கியுள்ளன. இவற்றில் 196 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்களால் இயக்கப்பட்டுள்ளன.  இந்த விமானங்கள் மூலம் இன்று வரை கொண்டு செல்லப்பட்ட சரக்கு சுமார் 541.33 டன் மற்றும் லைஃப்லைன் உதான் விமானங்கள் சென்றடைந்த வான்வழி தூரம் 3,14,965 கி.மீ ஆகும்.

பவன் ஹான்ஸ் நிறுவனம்  உள்ளிட்ட பல ஹெலிகாப்டர் சேவைகள் ஜம்மு-காஷ்மீர், லடாக், தீவுகள் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் முக்கியமான மருத்துவ சரக்குகளையும் நோயாளிகளையும் ஏற்றி செல்கின்றன. ஏப்ரல் 20 ம் தேதி வரை பவன் ஹான்ஸ் 6537 கி.மீ தூரத்தை கடந்துள்ளதுடன் 1.90 டன் சரக்குகளைக் கொண்டு சென்றுள்ளது.

****************


(வெளியீட்டு அடையாள எண்: 1617003) வருகையாளர் எண்ணிக்கை : 251
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Gujarati , Odia , Telugu