வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கொவிட் -19 தொற்றுநோய்ப் பரவலின் போது டில்லி வடக்கு மாநகராட்சி ஊழியர்களைப் பாதுகாக்க எடுத்த விரிவான நடவடிக்கைகள்.

Posted On: 22 APR 2020 11:46AM by PIB Chennai

COVID-19 தொற்றுநோயின் சோதனையான இந்தக் காலங்களில், வடக்கு டெல்லி மாநகராட்சி (North DMC) அதன் ஊழியர்களுக்கு சாத்தியமான அனைத்து பாதுகாப்பையும் உறுதி செய்ய தொடர்ச்சியான விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் சேவை தொடர்பாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு டில்லி மாநகராட்சி (North DMC) ஒவ்வொரு கட்டுப்பாட்டு மண்டலத்திற்கும் வெளியே ஒரு சுகாதார நிலையத்தை நிறுவியுள்ளது. துப்புரவு, பொறியியல், பொதுசுகாதாரம் அல்லது எந்தவொரு துறையிலிருந்தும் வரும் ஊழியர்களும், இந்த சுகாதார நிலையங்களிலிருந்து தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொண்டு தங்கள் கடமையைத் தொடங்குகிறார்கள்.

இதன் மூலம் ஒவ்வொரு ஊழியரும் முழு பாதுகாப்புடன், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் நுழைவது மேலும் உறுதி செய்யப்படுகிறது.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் உணவு அனுமதிக்கப்படாததால், ஊழியர்களின் வேலை முடிந்தபின், ஒரு தனி இடத்தில் உணவு வழங்கப்படுகிறது. இந்த இடங்களில் அனைத்து சமூக விலகல் விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

**********


(Release ID: 1616992) Visitor Counter : 247