அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் - 19 நோய்க்கு எதிராக இந்தியாவின் புது முயற்சி

Posted On: 20 APR 2020 4:31PM by PIB Chennai

கிராம் நெகட்டிவ் செப்ஸிஸ் (Gram negative sepsis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் உள்ள, நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான மருந்து ஒன்றைத் தயாரிப்பதற்காக, அகமதாபாத்தில் உள்ள கெடிலா பார்மசூட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம், (CSIR), தனது முதன்மை நிறுவனமான புத்தாயிரம் ஆண்டு இந்திய தொழில்நுட்பத் தலைமை முயற்சித் திட்டத்தின் கீழ் (New Millennium Indian Technology Leadership Initiative - NMITLI)  2007 முதல் ஆதரவளித்து வருகிறது.

மிக மோசமாக பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை, இந்த மருந்தால், பாதியாகக் குறைந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு செயலிழந்து போன உறுப்புகளை மீண்டும் செயல்பட வைக்கவும், இந்த மருந்து உதவுகிறது. இப்போது, இது, இந்தியாவில் சந்தைப்படுத்தப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது கெடிலா பார்மசூட்டிக்கல் லிமிடெட் மூலமாக Sepsivac® என்ற பெயரில் வர்த்தக ரீதியாகக் கிடைக்கும்.

இது நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு தருணமாகும். ஏனென்றால் கிராம் நெகட்டிவ் செப்ஸிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, மரணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, மிகச்சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், உலக அளவில், எந்த ஒரு மருந்துக்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

கோவிட்-19 நோயால் இன்னலுறும் நோயாளிகளின் மருத்துவத் தன்மைகளுக்கும், கிராம் நெகட்டிவ் செப்ஸிஸ் நோயால் இன்னலுறும் நோயாளிகளின் மருத்துவத் தன்மைகளுக்கும் இடையே இருந்த ஒற்றுமைகளைக் கண்டறிந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் (CSIR) தற்போது, கோவிட் - 19 நோய் முற்றி மரணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க, இந்த மருந்தைப் பயன்படுத்த முடியுமா என்று மருத்துவ பரிசோதனைகள் செய்து வருகிறது.

இந்த மருந்தினை மருந்தியக்கப் பரிசோதனைகள்  (randomized, blinded, two arms, active comparator-controlled clinical trial )டத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் (DCGI) இந்த சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில், இந்த சோதனை பல மருத்துவமனைகளில் துவங்கப்படும்.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகள் விரைவில் குணமடையவும், அவர்கள் மூலமாக நோய் மற்றவர்களுக்குப் பரவுவதைக் குறைப்பதற்காகவும், கோவிட் 19 தொற்று உள்ள நோயாளிகளுடன் தொடர்பில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுகாதார நலப்பணியாளர்கள் ஆகியோருக்கு, நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை சிகிச்சை (ப்ரோஃபைலாக்சிஸ்) அளிப்பதற்கும், பயனளிக்கும் வகையில் Mwவை மதிப்பீடு செய்யவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.



(Release ID: 1616453) Visitor Counter : 443