உள்துறை அமைச்சகம்
ஏப்ரல் 20-ஆம் தேதியிலிருந்து ஊரடங்குக் கட்டுப்பாடுகளில் விலக்கு அளிப்பது, கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது ஆகியவை தொடர்பாக மாநிலங்களுடன் விவாதிக்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு
प्रविष्टि तिथि:
19 APR 2020 4:59PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ,தமது அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், நாட்டில் கொவிட்-19 தொற்று நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது பற்றியும், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள சில ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்வு குறித்தும் மாநிலங்களுடன் விவாதிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா இன்னும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார். அதே போல, பொருந்தக்கூடிய ஊரடங்குக் கட்டுப்பாடுகள், தேசிய அளவிலான உத்தரவுக்கு இணங்க தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நிலைமையை ஆய்வு செய்த உள்துறை அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகள், தொகுப்பு இடங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஆகியவை அல்லாத பகுதிகளில் சில செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கும் அதே வேளையில், உண்மையில் பாதிக்கப்படாத இடங்களில் மட்டுமே, விலக்குகள், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
(रिलीज़ आईडी: 1616318)
आगंतुक पटल : 325
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam