நிதி அமைச்சகம்
கொவிட்-19 காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவின் பலன்களை வரி செலுத்துவோர் அனுபவிக்க திரும்பச் செலுத்துதல் படிவங்களைத் திருத்துகிறது மத்திய நேரடி வரிகள் வாரியம்.
Posted On:
19 APR 2020 3:41PM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு காலக்கெடு நீட்டிப்புகளின் முழுப் பலன்களை வரி செலுத்துவோர் அனுபவிக்க ஏதுவாக, நிதி ஆண்டு 2019-20க்கான (மதிப்பீடு வருடம் 2020-21) திரும்பச் செலுத்துதல் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் திருத்துகிறது. இவை இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் தெரியப்படுத்தப்படும்.
30 ஜூன் 2020 வரை அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு காலக்கெடு நீட்டிப்புகளின் முழுப் பலன்களை வரி செலுத்துவோர் அனுபவிக்க ஏதுவாக, 1 ஏப்ரல் 2020 முதல் 30 ஜூன் 2020 வரை தாங்கள் செய்த பரிவர்த்தனைகளுக்கான நிதி ஆண்டு 2019-20க்கான திரும்பச் செலுத்துதல் படிவங்களில், வரி செலுத்துவோர் பலன்களை அடையும் விதத்தில் தேவையான மாற்றங்களை தான் செய்துகொண்டிருப்பதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று கூறியது.
2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தாங்கள் செய்த பரிவர்த்தனைகள்/மூலதனங்களுக்கான பலன்களை வரி செலுத்துவோர் அடைய, திரும்ப செலுத்துதல் படிவங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கமளித்தது. மாற்றப்பட்ட படிவங்கள் வெளியிடப்பட்டவுடன், தொடர்புடைய மாற்றங்களை மென்பொருளிலும், திரும்பச் செலுத்துதலை தாக்கல் செய்யும் பயன்பாட்டு தளத்திலும் மத்திய நேரடி வரிகள் வாரியம் பதிவேற்றம் செய்யும். எனவே, நிதி ஆண்டு 2019-20க்கான பலன்களைப் பெறுவதற்கு, தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட பின் திரும்பச் செலுத்துதலை தாக்கல் செய்யும் பயன்பாட்டுத் தளம் 31 மே, 2020இல் கிடைக்க செய்யப்படும்.
கொவிட்-19 பெரும் பரவலைத் தொடர்ந்து, வருமான வரி சட்டம், 1961, பார்வை, வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (சில விதிகளின் கீழ் தளர்வுகள்) அவசரச் சட்டம் 2000இன் கீழ் பல்வேறு காலக்கெடுகளை அரசு நீட்டித்து இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. அதன்படி, நிதி ஆண்டு 2019-20இல் பிரிவு 80சி (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ் இன்னும் பல), 80டி (மருத்துவ காப்பீடு), 80ஜி (நன்கொடை) ஆகியவற்றை உள்ளடக்கிய வருமான வரி சட்டத்தின் அத்தியாயம்-VIA-Bஇன் கீழ் கழிக்கப்படவேண்டிய முதலீடு/கட்டணத்துக்கான தேதியும் 30 ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிவுகள் 54இல் இருந்து 54GB வரை மூலதன ஆதாயம் தொடர்பான நீட்டித்தல் சலுகையை பெற முதலீடு/கட்டுமானம்/வாங்குதல் ஆகியவற்றை செய்வதற்கான தேதியும் 30 ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நிவாரண காலத்துக்கான தகவல்களை அளிப்பதற்காக திரும்பச் செலுத்துதல் படிவங்கள் திருத்தப்படுகின்றன.
சாதாரணமாக, வருமான வரி திரும்பச் செலுத்துதல் படிவங்கள் ஏப்ரல் முதல் வாரம் வெளியிடப்படும் என்பதை நினைவில் கொள்ளலாம். இந்த வருடம் கூட, மதிப்பீடு வருடம் 2020-21க்கான திரும்பச் செலுத்துதலை சமர்ப்பிப்பதற்கான மின்னணு தாக்கல் தளம் ஏப்ரல் 1, 2020 அன்றே பயன்பாட்டுக்கு கிடைக்கச் செய்யப்பட்டது. மேலும், 2019-20 ஆண்டுக்கான வருமான வரி திரும்ப செலுத்துதல் (ITR) படிவங்களான ITR-1 (சஹஜ்) மற்றும் ITR-4 (சுகம்) ஆகியவையும் 3 ஜனவரி, 2020 தேதியிட்ட அறிவிக்கை வாயிலாக ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. ஆனலும், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள காலக்கெடு நீட்டிப்புகளின் முழுப் பலன்களை வரி செலுத்துவோர் பெற ஏதுவாக, திரும்ப செலுத்துதல் படிவங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
***
(Release ID: 1616091)
Visitor Counter : 318
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam