சுற்றுலா அமைச்சகம்

“தேக்கோ அப்னா தேஷ்” (பாருங்கள் நம் தேசத்தை) என்ற இணையதள தொடர் மூலமாக உலக பாரம்பரிய தினம் இன்று, மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது.

நமது பாரம்பரியத்தின் மனிதத் தன்மையின் மதிப்புகளும், மனமார்ந்த விருந்தோம்பலும், நமது நாட்டின் அடையாளங்கள்: திரு.பிரகலாத் சிங் படேல்

Posted On: 18 APR 2020 5:34PM by PIB Chennai

“உலக பாரம்பரிய தினம் 2020 இன்று இணைய வழி கருத்தரங்கு தொடர் மூலமாக மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது.

 

இந்த தொடரில், புராதன கோவில் நகரமான மாமல்லபுரம் பற்றிய நிகழ்ச்சியில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பங்கேற்றவர்களிடையே, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் (பொறுப்பு) திரு பிரகலாத் சிங் படேல் உரையாற்றினார்.

 

இந்த இணையவழி தொடரில் புராதன கோவில் நகரமான மாமல்லபுரம் பற்றிய முதலாவது தொடர் கருத்தரங்கு நிகழ்ச்சியில் அங்குள்ள கோவில்களின் கட்டடக்கலை மற்றும் மத ரீதியிலான முக்கியத்துவம் குழு உறுப்பினர்களால் எடுத்துரைக்கப்பட்டது. இரண்டாவது இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி Humayun's Tomb “ஹுமாயுன் சமாதி உள்ள இடத்தில் உலக பாரம்பரியம் மற்றும் தொடர் சுற்றுலா” என்பது பற்றியது. உலக பாரம்பரிய தலங்களின் முக்கியத்துவம் குறித்தும் Humayun's Tomb  ஹுமாயுன் சமாதி மற்றும் அந்த வளாகத்தில் உள்ள இதர நினைவுச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் பற்றியும் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

 

இக்கருத்தரங்கில் பேசிய திரு படேல், நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் பழமையானது மட்டுமல்ல; மதிப்பற்றதாகவும் விளங்குகிறது என்பதை எடுத்துக் கூறினார். கோவிட் 19 நோய் ஏற்படுத்தியுள்ள நிலைமைகளை உலகமும் நமது நாடும் சந்தித்துவரும் இந்த நெருக்கடியான சமயத்தில், மனிதத் தன்மையின் மதிப்புகளும், மனமார்ந்த விருந்தோம்பலும் நம்மை வரையறுக்கின்றன. இவையே நாம் இப்போது இருக்கும் பாரம்பரிய நிலைக்கு நம்மை உருவாக்கியுள்ளன. மஹா உபநிஷத்தில் “வாசுதேவ குடும்பம்” “உலகமே நமது குடும்பம்” என்று கூறப்படும் ஸ்லோகத்தைக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அளிப்பதன் மூலம், எளிமையையும் அன்பையும் கொண்டது இந்தியா என்பதை இந்தியா நிரூபித்திருக்கிறது என்று கூறினார்.



(Release ID: 1616023) Visitor Counter : 173