ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான போரில் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க, உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை விநியோகிப்பதில் தேசிய உரங்கள் நிறுவனம் பெரும் பங்காற்றுகிறது

Posted On: 18 APR 2020 4:43PM by PIB Chennai

கொவிட்-19 கட்டுப்படுத்துவதற்கானஅரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க, உணவு, மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை விநியோகிப்பதில், இந்திய அரசின் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் உரங்கள் துறையின் கீழ் இயங்கும் முன்னணி உர நிறுவனமான, தேசிய உரங்கள் நிறுவனம் பெரும் பங்காற்றுகிறது

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர், திரு. டி வி சதானந்த கௌடா, இந்த நிறுவனம் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி உள்ளார்.

கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து போரிட, பதிந்தா மாவட்ட நிர்வாகத்துக்கு 3,000 முகக்கவசங்களை தேசிய உரங்கள் நிறுவனத்தின் பதிந்தா ஆலை அளித்துள்ளது.

பானிபட் மாவட்ட நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாயை தேசிய உரங்கள் நிறுவனத்தின் பானிபட் ஆலை அளித்துள்ளது. இது அந்த நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே வழங்கியுள்ள தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ 88 லட்சத்தை உள்ளடக்காததாகும்.

பெங்களூரூவில் உள்ள பொது சேவை அலுவலர்களுக்கு N95 முகக்கவசங்களையும் கிருமி நாசினிகளையும் தேசிய உரங்கள் நிறுவனத்தின் கர்நாடக மாநில அலுவலகம் வழங்கியுள்ளது


***



(Release ID: 1616020) Visitor Counter : 150