அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் தேசிய விண்வெளி ஆய்வகம் (CSIR-NAL) கொவிட்-19 ஐ எதிர்த்து போராட தனிநபர் உபயோகத்திற்கு பாதுகாப்பு கவச உடையை தயாரித்துள்ளது

Posted On: 18 APR 2020 12:21PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள CSIR ஆய்வகத்தின் ஒரு பகுதியான, தேசிய விண்வெளி ஆய்வகம் (CSIR-NAL), MAF ஆடை நிறுவனத்துடன் இணைந்து, முழு பாதுகாப்பு கவச உடையை உருவாக்கி சான்றளித்துள்ளது. கொவிட்-19 காரணமாக இரவு பகலாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பல அடுக்கு பாலிப்ரொப்பிலீன் (Polypropylene) துணி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த கவச உடையைப் பயன்படுத்தலாம்.

CSIR-NAL குழுவின் தலைவர் டாக்டர் ஹரிஷ் சி பார்ஷிலியா, டாக்டர் ஹேமந்த் குமார் சுக்லா, மற்றும் MAF இன் திரு. எம். ஜே விஜு ஆகியோர் உள்நாட்டு பொருட்கள் மற்றும் புதுமையான உற்பத்தி செயல்முறைகள் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக பணியாற்றியுள்ளனர்.

இந்த கவச உடைகள் கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தில் (SITRA) கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு தகுதி பெற்றன. CSIR-NAL மற்றும் MAFம், நான்கு வார காலத்திற்குள் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு சுமார் 30,000 உடைகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.

*********



(Release ID: 1615699) Visitor Counter : 919