அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிய கொரோனா வைரசை எதிர்கொள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சிகள்
கோவிட் - 19 நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட வைரசின் மரபணு வரிசைப்படுத்தும் முயற்சி
Posted On:
18 APR 2020 12:26PM by PIB Chennai
அறிவியல் தொழிலியல் ஆராய்ச்சி சபையின் 5 வகையான ஆய்வுகளில் 3 குறித்து ஆராய்ந்து வரும் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கோவிட் – 19 நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட வைரசின் மரபணு வரிசையைக் காண்பதற்காக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்
கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளது.
லக்னோவில் உள்ள இந்த ஆய்வகம், தொடக்கத்தில் சில நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட வைரஸ் வகைகளின் மரபணுக்களை வரிசைப்படுத்தும். இந்தச் செயல்பாடு
முதல் வகை ஆராய்ச்சிப் பணியான ' டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு ஆய்வு’ என்பதின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும்.
இப்போதைய ஆய்வுகளின்படி, இந்த வைரஸின் 8 வெவ்வேறு வகைகள் கோவிட்-19 தொற்றினை ஏற்படுத்துகின்றன எனத் தெரியவந்துள்ளது. வைரஸின் மரபணு வரிசை
மாற்றங்கள் உத்தேச சிகிச்சை அணுகுமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
(Release ID: 1615696)
Visitor Counter : 194
Read this release in:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada