சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

கோவிட் 19 பொது முடக்கத்தின்போது சாமானிய மக்களுக்கு உதவி வருகிறது சாலை போக்குவரத்துத் துறை

Posted On: 17 APR 2020 5:30PM by PIB Chennai

கோவிட் 19 தொற்று காரணமாக தேசிய அளவிலான பொது முடக்கத்தின்போது சாலையில் உள்ள மக்களுக்கு உதவும் சமூகப் பொறுப்புப் பணிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. சென்ற மாதம் 24ஆம் தேதி பிரதமரால் அறிவிக்கப்பட்ட தேசிய அளவிலான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்த அமைச்சகத்தின், நாடு முழுவதிலுமுள்ள களப்பணி பிரிவுகள், இந்த அமைச்சகத்தின் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

அமைச்சகத்தின் அனைத்து களப்பணி அமைப்புகளும், அலுவலகங்களும், அமைச்சகத்துடன் இணைந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் நெடுஞ்சாலை ஆணையம் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் போன்ற அமைப்புகளும் மக்களின் சிரமங்களைத் தீர்க்க முன்வந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு எவ்வாறு உதவிளிக்கப்பட்டது என்பது பற்றிய அறிக்கைகள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த வண்ணம் உள்ளன.

தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ரோந்துக் குழுவினர், தேசிய நெடுஞ்சாலை எண் 45 ல், பாலூரில், ஐந்து பேர் இருப்பதைக் கண்டனர். அவர்களுக்கு உடனடியாக, உணவும் குடிநீரும் கொடுக்கப்பட்டது. அவர்களது பாதுகாப்புக்காக முகக் கவசங்களும் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு அருகிலிருந்த முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்றுவரை அவர்களுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்படுகிறது.


(Release ID: 1615452) Visitor Counter : 150