எரிசக்தி அமைச்சகம்
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய வெப்ப மின் நிறுவனம் (NTPC) கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அதன் 45 மருத்துவமனைகள் / சுகாதாரப் பிரிவுகளையும் பயன்படுத்துகிறது.
Posted On:
16 APR 2020 3:27PM by PIB Chennai
மத்திய எரிசக்தி மற்றும் புதிய, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. ஆர் கே சிங் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய வெப்ப மின் நிறுவனம் (NTPC), கொரோனா வைரஸின் (COVID-19) பரவலைத் தணிக்க விரைவாக செயல்படுகிறது, இது தடையற்ற மின்சாரம் வழங்குவது மட்டுமல்லாமல் அதன் மருத்துவ / சுகாதார பிரிவுகளையும், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியையும் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை உறுதிசெய்தது.
கொவிட்-19இன் உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வை விரைவுபடுத்திய NTPC ஏற்கனவே தனது 45 மருத்துவமனைகள் / சுகாதாரப் பிரிவுகளில் தனிமைப்படுத்தும் வசதிகளைப் ஏற்படுத்தியுள்ளதுடன் இதுபோன்ற நிகழ்வுகளைத் திறம்படக் கையாள மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வாங்கியுள்ளது. அங்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சுமார் 168 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் அனைத்து மருத்துவமனைகள் / சுகாதார பிரிவுகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் கூடுதலாக 122 படுக்கைகள் தேவையின் அடிப்படையில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். டெல்லி, பதர்பூரில் உள்ள மருத்துவமனை மற்றும் ஒடிசாவில் உள்ள சுந்தர்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இரண்டு மருத்துவமனைகளும், கொவிட் நோயாளிகளுக்கு மாநில அரசுகள் சிகிச்சையளிக்க தயார் செய்யப்பட்டுள்ளன.
தரமான சுகாதார உபகரணங்கள் கிடைக்கச் செய்வது காலத்தின் தேவை என்பதால், உபகரணங்கள் கொள்முதல் செய்ய கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, தேசிய வெப்ப மின் நிறுவனத்தின் மருத்துவமனைகளில் 7 வென்டிலேட்டர்கள் உள்ளன. அத்துடன் வென்டிலேட்டர்களுடன் கூடிய 18 மேம்பட்ட நிலை ஆம்புலன்ஸ்கள், 18 வென்டிலேட்டர்கள் மற்றும் 520 ஐஆர் தெர்மோமீட்டர்கள் ஆகியவை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கான கொள்முதல் செய்யப்பட உள்ளது.
****************
(Release ID: 1615033)
Visitor Counter : 213