அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கோவிட்19 தொற்று ஆரம்ப கட்ட நிலையிலிருந்து முற்றிய நிலைக்குச் செல்லுமா என்பதற்கான உயிரியல் குறிப்பான்களைக் கண்டறிவதற்கான ஆய்வு, சிகிச்சைக்கு உதவும்.
Posted On:
15 APR 2020 7:33PM by PIB Chennai
கோவிட் 19 தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளில். வளர்சிதை மாற்றத்தில், மாற்றங்கள் கொண்டு வருவது பற்றி, மும்பையில் உள்ள சில மருத்துவமனைகளுடன் இணைந்து மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) நடத்தும் ஆய்வுகளுக்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் சட்டபூர்வமான அமைப்பாகிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் ஆதரவளிக்கும்.
கோவிட்19 தொற்று ஆரம்ப கட்ட நிலைகளிலிருந்து முற்றிய நிலைகளுக்குச் செல்லுமா என்பதைக் கண்டறியக் கூடிய உயிரியல் குறிப்பான்களை இந்த ஆய்வு கண்டறியும். உயிரியல் குறிப்பான்களைக் கண்டறிவதற்கான இந்த ஆய்வில், பல்வேறு பிரச்னைகளுடன் உள்ள வெவ்வேறுவிதமான நோயாளிக் குழுக்களை, அவர்களின் வளர்சிதை மாற்ற விவரங்களைக் கண்டறிவதும் அடங்கும்.
மெட்டாபொலைட்ஸ் எனப்படும் வளர்சிதை மாற்ற வேதியியல் கூறுகள், உயிரினங்களை எல்லாவற்றிலும் உள்ள பல்வேறு பாதைகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட உயிரியல் கூறுகளாகும்.
ப்ரோட்டோமிக்ஸ் மற்றும் மெட்டாபாலமிக்ஸ் ஆய்வுக்காக, பல்வேறு தரப்பட்ட மனிதர்களை கையாளும் நிபுணத்துவம் கொண்ட, 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, இப்பணியில் ஈடுபடும்.
“வளர்சிதை மாற்றம் அல்லது ப்ரோட்டியம் பற்றிய விரிவானஆய்வுகளின் மூலமாக, உயிரியல்குறிப்பான்களை உறுதிப்படுத்துவதன் அடிப்படையில், கோவிட்19 தொற்று மிதமாக அல்லது தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை வேறுபடுத்திப் பார்க்க இது ஒரு நல்ல அணுகுமுறை. இது வெற்றி பெற்றால்,முற்றிய நிலையில் உள்ள நோய்களைக் கண்டறிவது; சிகிச்சை அளிப்பது ஆகிய இரண்டுக்குமான உத்திகளுக்கு இது உதவும்” என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள டாக்டர் சஞ்சீவி ஸ்ரீவஸ்தவா ஐஐடி மும்பை. மின்னஞ்சல் sanjeeva@iitb.ac.in அலைபேசி 9167111637
(Release ID: 1614974)
Visitor Counter : 194