சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பொது முடக்கம் தொடங்கியதில் இருந்து ஆதரவற்ற பெண்கள் / பிச்சைக்காரர்கள் / வீடற்றவர்கள் 1.27 கோடிக்கு மேற்பட்டோருக்கு இலவச உணவுக்கு ஏற்பாடு செய்தது - சமூக நீதி அதிகாரம் அளித்தல் அமைச்சகம்

Posted On: 15 APR 2020 5:48PM by PIB Chennai

பொது முடக்கம் தொடங்கியதில் இருந்து ஆதரவற்ற பெண்கள் / பிச்சைக்காரர்கள் / வீடற்றவர்கள் போன்ற 1.27 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஏப்ரல் 10ம் தேதி வரை, பெரிய மாநகராட்சிகளுடன் இணைந்து  சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் இலவச உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைச்சகம் ஏற்கெனவே தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, நாக்பூர், பாட்னா, இந்தூர் ஆகிய 10 நகரங்களை தேர்வு செய்துள்ளது. பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மறுவாழ்வுக்கு முழுமையான திட்டத்தை அமல் செய்வதற்கு இவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றின் ஆதரவுடன்,  பிச்சைக்காரர்களை அடையாளம் காணுதல், மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்தல், மருத்துவ வசதிகள், கலந்தாய்வு, கல்வி, தொழில் திறன் அளித்தல் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டத்தை அமல் செய்வதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீத நிதி உதவி அளிக்கப்படுகிறது.

கோவிட்-19 தொற்று தாக்குதலால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி, அதன் தொடர்ச்சியாக பொது முடக்க நிலை அமல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தற்போது பிச்சை எடுப்போர், சாலைகளில் சுற்றித் திரியும் பலர் பட்டினியால் அதிக சிரமங்களுக்கு ஆளாவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, பிச்சைக்காரர்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு  சமைத்த உணவை இலவசமாக வழங்குவதற்கு, உணவளிக்கும் மையங்களை உடனடியாக ஏற்படுத்துமாறு 10 நகரங்களின் மாநகராட்சிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டன. எதிர்காலத்தில் விரிவான தேசியத் திட்டத்தில் பயனாளிகளை அடையாளம் காணவும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்.



(Release ID: 1614825) Visitor Counter : 183