ரெயில்வே அமைச்சகம்
பார்சல் ரெயில்கள் ரெயில்வேக்கு வருமானம் ஈட்டித்தர ஆரம்பித்துள்ளன; ஊரடங்கு காலகட்டம் ஆரம்பித்ததில் இருந்து 20400 டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டதன் மூலம் ரூ.7.54 கோடி வருமானம் கிடைத்துள்ளது
प्रविष्टि तिथि:
15 APR 2020 3:46PM by PIB Chennai
கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது மருந்துப்பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு முதலான இன்றியமையாத பொருள்களை சிறு, சிறு பார்சல்களாக ஏற்றிச்செல்வது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இந்திய ரெயில்வேயானது இந்த முக்கியமான தேவையைக் கருத்தில் கொண்டு, அதனைப் பூர்த்தி செய்யும் வகையில், இ-வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட மற்ற வாடிக்கையாளர்கள் விரைவாக அதிக பொருள்களை ஏற்றி அனுப்பும் வகையில் ரெயில்வே பார்சல் வேன்களை வழங்கியுள்ளது. இன்றியமையாத பொருள்கள் தடையின்றி எடுத்துச் செல்வதை உறுதி செய்வதற்காக ரெயில்வே தேர்ந்தெடுத்த வழித்தடங்களில் நேர அட்டவணைப்படி பார்சல் சிறப்பு ரெயில்களை இயக்க முடிவெடுத்தது.
இத்தகைய பார்சல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டிய வழித்தடங்களை மண்டல ரெயில்வேக்கள் அடையாளம் கண்டு அறிவித்து வருகின்றன. தற்போது இத்தகைய ரெயில்கள் 65 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. கீழ்வருவனவற்றை உள்ளடக்கும் வகையில் இந்த வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:
- தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நாட்டின் பெரும் நகரங்களுக்கு இடையில் வழக்கமான இணைப்பு.
- மாநிலத்தலைநகரம் / முக்கிய நகரங்களில் இருந்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்குமான இணைப்பு
- நாட்டின் வட-கிழக்குப் பகுதிகளுக்கான இணைப்பை உறுதி செய்தல்
- பால் மற்றும் பால்பொருள்கள் அதிகளவில் இருக்கின்ற (குஜராத், ஆந்திரப்பிரதேசம்) பிராந்தியங்களில் இருந்து, தேவையுள்ள மற்ற பிராந்தியங்களுக்கு எடுத்துச் செல்லுதல்.
- இன்றியமையாத பிற பொருள்களை (வேளாண் உள்ளீட்டுப் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் முதலானவை) உற்பத்தியாகும் பிராந்தியங்களில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விநியோகித்தல்.
(रिलीज़ आईडी: 1614737)
आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada