பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்19 தொற்று நோய் கண்டறிவதற்கான மாதிரி சேகரிப்பு கியாஸ்க் ஒன்றை ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர் டி ஓ) தயாரித்துள்ளது

Posted On: 14 APR 2020 5:26PM by PIB Chennai

கொரானோ வைரஸ் (கோவிட்19) தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கோவிட்19 தொற்று கண்டறிவதற்கான மாதிரி சேகரிப்பு கியாஸ்க் ன்றை ஹைதராபாதில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வுக் கூடம் (டி ஆர் டி எல்) தயாரித்துள்ளது. கோவிட்19 தொற்றுக்கு எதிரான கண்டுபிடிப்புகளில் கூடுதலாக இதுவும் ஒன்றாகும்.

ஹைதராபாதில் உள்ள ஊழியர் காப்பீட்டு கழகம்  ஈ எஸ் ஐ சி யிலுள்ள மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, (டி ஆர் டி எல்) இதனைத் தயாரித்துள்ளது. கோவ்சேக்  எனப்படும் இந்த கியாஸ்க் கோவிட் 19 தொற்று நோய் உள்ளது என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து, மாதிரிகளை சுகாதார பணியாளர்கள் சேகரிக்கும் கியாஸ்க் ஆகும். பரிசோதனை செய்யப்படும் நபர் கியாஸ்கிற்குள் நடந்து செல்வார். அவர் மூக்கிலிருந்து அல்லது வாயிலிருந்து சளி, உமிழ்நீர் கையுறைகள் மூலமாக சுகாதாரப் பணியாளர்களால் எடுக்கப்படும். தில் சுத்திகரிப்பு செய்து கொள்ளும்போது, மனிதர்களின் செயல்பாடு இல்லாமலேயே,  தானாகவே சுத்திகரித்துக் கொள்ளும் .இதனால் தொற்று பரவாமல் இருக்கும்.



(Release ID: 1614688) Visitor Counter : 171