விவசாயத்துறை அமைச்சகம்
பொது முடக்கத்தின் போது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் நடவடிக்கைகளை வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் ஆய்வு செய்தார்
Posted On:
14 APR 2020 5:46PM by PIB Chennai
கொவிட்-19 பெரும் தொற்று நோயாலும், அதன் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தினாலும் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விவசாயிகள் மீண்டு வர உதவி செய்யும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் நடவடிக்கைகளை, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலம் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் ஆய்வு செய்தார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூன்று அமைப்புகள் மனிதர்கள் மீது கொவிட்-19 ஆய்வை மேற்கொண்டுள்ள நிலையில், பொது முடக்கத்தின் போது விவசாயிகளுக்கு உதவ பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு அனைத்து வேளான் பல்கலைக்கழங்களையும் திரு. தோமர் வலியுறுத்தினார்.
15 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலங்களுக்கெனெ பிரத்யேக ஆலோசனைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் திரிலோச்சன் மொகபத்ரா ஆய்வு கூட்டத்தின் போது தெரிவித்தார்.
வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமரின் அறிவுறுத்தல்களின் படி, எம்கிசான் (mKisan) வளைதளம் மூலமாக 5.48 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை 1,126 ஆலோசனை கையேடுகள் மூலம் வேளாண் அறிவியல் மையங்கள் (Krishi Vigyan Kendra - KVK)) சென்றடைந்துள்ளன. ஆலோசனை கையேடுகள் வாட்ஸ்அப் குழுக்கள் (5.75 லட்சம் விவசாயிகளைக் கொண்ட 4893 வேளாண் அறிவியல் நிலையம் (Krishi Vigyan Kendra - KVK) வாட்ஸ்அப் குழுக்கள்) மூலமாகவும், இதர டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும் (8.06 லட்சம் விவசாயிகளை சென்றடைந்துள்ளது) அனுப்பப்படுகின்றன. KVKக்களின் அறிவுரை தொடர்பாக 936 செய்திகள், செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன, 931 வானொலி பேச்சுகளின் மூலமாகவும் 57 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
***
(Release ID: 1614652)
Visitor Counter : 183