உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

நாடு முழுக்க மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கச் செய்வதில் அரசும் விமானப் போக்குவரத்து துறையும் உத்தரவாதம்

Posted On: 14 APR 2020 7:47PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதில் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை உறுதி தெரிவித்துள்ளது. மருந்துகளையும், சரக்குகளையும் இந்தியாவுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் குறைந்த செலவில், சிறப்பான முறையில் கொண்டு போய் சேர்த்திருப்பதன் மூலம் இந்தத் துறை சேவையாற்றி வருகிறது. `உயிர்காக்கும் உடான்' விமான சேவைகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இயக்கி வருகிறது. கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அணுகுதல் வசதியில்லாத தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் இதன் மூலம் கொண்டுபோய் சேர்க்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் உயிர்காக்கும் உடான் விமான சேவையில் 227 விமானப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் நிறுவனங்களின் 138 பயணங்கள் மூலம் சுமார் 407.40 டன்கள் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதுநாள் வரையில் உயிர்காக்கும் உடான் விமானச் சேவைகள் மூலம் 2,20,129 கிலோமீட்டர் அளவுக்கு வான்வழிப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகளை, எளிதில் அணுகமுடியாத தொலைதூரப் பகுதிகளுக்கு தொடர்ந்து கிடைக்கச் செய்வதில், கோவிட் போர் வீரர்களாக இவர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர்.

 

பயணித்துள்ள தொலைவு

2,20,129 கிலோ மீட்டர்கள்

12.04.2020 அன்று கையாளப்பட்ட சரக்குகள்

29.90 டன்கள்

12.04.2020 வரையில் கையாளப்பட்ட மொத்த சரக்குகள்

377.50 + 29.90 = 407.40 டன்கள்(Release ID: 1614651) Visitor Counter : 47