தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர்களுக்கான ஈட்டுறுதிப் பங்கை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் நீடிப்பு

3.49 கோடி காப்பீடு செய்யப்பட்ட நபர்களும் 12,11,174 நிறுவன உரிமையாளர்களும் பயனடைவார்கள்

Posted On: 14 APR 2020 4:51PM by PIB Chennai

நிவாரண நடவடிக்கையாக தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கு, பிப்ரவரி மாதத்திற்கான தொகையை 15 ஏப்ரல் 2020 வரையிலும், மார்ச் மாதத்திற்கான தொகையை 15 மே 2020 வரையிலும் செலுத்தலாம் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது நிறுவனங்கள் சந்தித்துவரும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி மாதத்துக்கான தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கான காலம் 15 ஏப்ரல் 2020 இல் இருந்து 15 மே 2020 என்று நீடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மார்ச் மாதத்திற்கான தொகையைச் செலுத்துவதற்கான கால அவகாசம் 15 மே 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் செலுத்தப்பட்டுவிடும் தொகைக்கு நிறுவனங்கள் மீது, எந்தவித அபராதத் தொகையை வரியோ விதிக்கப்படமாட்டாது. காப்பீடு செய்யப்பட்ட 3.49 கோடி பேர் மற்றும் 121174 நிறுவன உரிமையாளர்களும் இந்தக் கால அவகாச நீடிப்பினால் பயனடைவார்கள்.

ஊரடங்கு காலத்தின்போது, ESI பயனாளிகளின் சிரமங்களைக் குறைப்பதற்காக, பயனாளிகள் மருந்துகளை, தங்களுக்கு அருகில் உள்ள தனியார் மருந்தகங்களில் இருந்தும் வாங்கிக்கொண்டு, அதன் பிறகு ESIC இல் இருந்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது



(Release ID: 1614428) Visitor Counter : 200