ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இரசாயன மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்தித் தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் அவர்களது சங்கத்தினருடன் காணொளிக் காட்சி மூலம் மத்திய மருந்துகள் சார் துறையின் செயலாளர் ஆலோசனை

Posted On: 13 APR 2020 7:05PM by PIB Chennai

உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வெளிநாடுகளுக்கு அளித்த உத்தரவாதங்களைக் காப்பற்றவும் தேவையான அளவுக்கு ஹைட்ராக்சி குளோரோ குயினைன் மாத்திரைகளைத் தயாரிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறை போதிய அளவுக்கு உற்பத்தி செய்து வருகிறது. மாநில / யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உதவியுடன், இந்த மருந்துகள் உற்பத்தி மற்றும் நாடு முழுக்க இதைக் கொண்டு செல்லப்படுதல் உறுதி செய்யப்படுகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் தொழில் துறையினருக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு மத்திய மருந்துகள் சார் துறையின் செயலாளர் டாக்டர். பி.டி. வகேலா தலைமையில் இங்கு இன்று காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த சூழ்நிலை உருவானது.

பல்வேறு இடங்களில் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை தொழில் துறையினர் எடுத்துரைத்தனர். வடகிழக்குப் பகுதியில் மருந்துகள் வழங்குவதில் ஏற்பட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகளின் ஒருங்கமைந்த முயற்சிகள் மூலம் தீர்வு காணப்பட்டது. இந்தத் துறையினரின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, உரிய அதிகாரிகள் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, தொழில் துறையினர், மாநிலங்கள் மற்றும் இதர துறைகளுடன்;  இமெயில், வாட்ஸப் குழுக்கள், மருந்துகள்சார் துறையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் என்.பி.பி.ஏ. மூலமாகவும், காணொளிக் காட்சி மூலமாகவும், தங்கள் துறை தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.



(Release ID: 1614235) Visitor Counter : 135