வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கொரோனோ தொற்று காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் போக்க மத்திய வர்த்தகத் துறை பல்வேறு தளர்வுகள், அவகாச நீட்டிப்புகளை அறிவித்துள்ளது

Posted On: 11 APR 2020 6:16PM by PIB Chennai

கொரோனோ பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைக்கு இடையே, பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் துறையினர் மற்றும் தனிநபர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதத்தில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின், வர்த்தகத் துறை, தனது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு, பல்வேறு கட்டுப்பாட்டுத் தளர்வுகளையும், அவகாச நீட்டிப்புகளையும் அறிமுப்படுத்தியுள்ளது. வர்த்தகத் துறையின் முக்கிய தளர்வுகள் வருமாறு;

  1. வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்ககத்தின் 2015-20க்கான வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் வசதிகள்

 

  1. வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2020  மார்ச் 31-க்குப் பின்னரும் நீட்டிப்பு.
  2. முன்கூட்டிய அங்கீகாரம், ஏற்றுமதி மேம்பாட்டு மூலதனப் பொருள்கள் அங்கீகாரம் ; ஏற்றுமதிப் பொறுப்புக் காலம் உள்ளிட்டவை நீட்டிப்பு.
  3. பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (ஆர்சிஎம்சி) 2020 மார்ச் 31-க்குப்பின்னரும் செல்லுபடியாகும் விதத்தில் நீட்டிப்பு.
  4. இந்தியா திட்டத்திலிருந்து சேவை ஏற்றுமதிகள் (Service Exports from India Scheme - SEIS); வருடாந்திர உரிமைக் கோரிக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2020 டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிப்பு
  5. இந்தியா திட்டத்தின் மூலம் வணிக ஏற்றுமதிகள் (Merchandise Exports from India Scheme - MEIS); தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, முதல் ஓராண்டுகால காலாவதி தேதிக்கு மேல் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
  6.  மத்திய, மாநில வரிகளிலிருந்து தள்ளுபடி (Rebate of State and Central Taxes and Levies - RoSCTL); இதற்கான கணக்குகள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2020 டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிப்பு
  7. அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதியாளர் சான்றிதழ்; வழங்கப்பட்ட அனைத்து நிலவரச் சான்றிதழ்களும் 2021 மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.

 

  1. சிறப்புப் பொருளாதார மண்டலத் தொழில் பிரிவுகளுக்கான (SPECIAL ECONOMIC ZONE - SEZ) வசதிகள்

(i) சிறப்புப் பொருளாதார மண்டல மேம்பாட்டாளர்கள், இணை மேம்பாட்டாளர்கள், தொழில் பிரிவுகளுக்கான தளர்வுகள் பின்வரும் விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிக்கப்படும்.

  1. மேம்பாட்டாளர்கள், இணை மேம்பாட்டாளர்கள் ,தனிப்பட்ட பட்டயப் பொறியாளர்களால் சான்றளிக்கப்பட்ட காலாண்டு முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
  2.  தகவல் தொழில்நுட்பம், ஐடிஇஎஸ் (IT/ITES) நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டிய சாப்டெக்ஸ் (SOFTEX) படிவம்
  3. சிறப்புப் பொருளாதார மண்டல தொழில் பிரிவுகளால் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருடாந்திர திறன் அறிக்கைகள்
  1. அனைத்து அங்கீகாரக் கடிதங்கள் மற்றும் மின்னணு வழியிலான இதர விதிமுறைகளை கால வரம்புக்குள்  நீட்டிக்க மேம்பாட்டு ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  2. இதுபோல, ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளின் LOPக்கள் காலாவதியானால், அவர்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு, மேம்பாட்டு ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
  3. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கும் IT/ITES நிறுவனங்களுடன், மற்ற நிறுவனங்களும் வீட்டில் இருந்தவாறு பணியாற்றுவதற்கு ஏற்ப கணினிகள், மடிக்கணினிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

 

  1. ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகத்தின் ( ECGC )வசதிகள் ;

மார்ச், ஏப்ரல் மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டிய உறுதிமொழிகள், விண்ணப்ப நீட்டிப்புகள், கணக்கு விவரங்கள், தவறுதல் அறிக்கை உள்ளிட்ட காப்பீட்டுடன் கூடிய விவரங்களைத் தாக்கல் செய்ய 2020 மே 31 வரை காலநீட்டிப்பு.

  1. இந்த காலகட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கோரிக்கை உரிமைகள், பதில்களின் நிலுவைக் காலம் 2020 ஜூன் 30 வரை நீட்டிப்பு
  2. கடன் தள்ளுபடி வரம்பு விண்ணப்பக் கட்டணத்துக்கு 2020 ஜூன் 30 வரை நீட்டிப்பு
  3. கொள்கைகள் புதுப்பித்தல், வழங்குதலுக்கான, கொள்கை முன்வடிவு செயல்முறைக் கட்டணம் 2020 மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை 50 சதவீதமாகக் குறைப்பு.
  4. வாங்குபவர்கள் முன்னர் ஒப்புக்கொண்ட கட்டணம் செலுத்துவதற்கான காலவரம்பு நீட்டிப்பு ஏற்றுமதியாளர்களைப் பொறுத்தது.
  5. கப்ப்ல்கள் ( மறுவிற்பனை, மறு ஏற்றுமதி, அல்லது கைவிடல்) சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்த பின்னர் அங்கு நிலவும் முடக்கம் காரணமாக வெளிநாட்டுக் கொள்முதலாளர்கள் சரக்குகளை இறக்க முடியாவிட்டால், அது பற்றி முடிவெடுக்கும் உரிமை.
  1. காப்பீட்டின் கீழ் வரும் கோரிக்கை உரிமை தகுதிக் காலம் தற்போதைய 4 மாத காலத்திலிருந்து ஒரு மாதமாகக் குறைப்பு.


(Release ID: 1613586) Visitor Counter : 260