பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

கோவிட் 19 பணிகள் தொடர்பாக சிஎஸ்ஆர் செலவினங்களுக்கான தகுதிகள் பற்றி மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் தொடர்பாக அமைச்சகத்திற்கு அடிக்கடி எழுப்பப்படும் வினாக்கள்

Posted On: 11 APR 2020 7:07PM by PIB Chennai

கோவிட்19 தொற்று நடவடிக்கைகள்  தொடர்பாக நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு திட்டத்தின் (கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி - சி எஸ் ஆர்)  செலவினங்களுக்கான தகுதிகள் பற்றி சில வினாக்கள் பல்வேறு தரப்பு நிறுவனங்களிடமிருந்தும் பங்குதாரர்களிடமிருந்தும் மத்திய நிறுவனங்கள் விவகார அமைச்சகத்துக்கு பல குறிப்புகளும் / கோரிக்கைகளும் வந்துள்ளன. இந்த வினாக்கள் குறித்து பங்குதாரர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

வினாக்களும் அதற்கான விடைகளும்

 

வரிசை எண்

அடிக்கடி எழுப்பப்படும் வினாக்கள்

விடை

  1.  

பிரதமர் பாதுகாப்பு நிதியத்திற்கு அளிக்கப்படும் தொகை சிஎஸ்ஆர் செலவினமாக தகுதி பெறுமா?

நிறுவனச் சட்டம் 2013, ஷெட்யூல் VII ஐட்டம் நம்பர் (viii) மற்றும்  மார்ச் 28 தேதியிடப்பட்ட அலுவலக குறிப்பு F. No. CSR-05/1/2020-CSR-MCA மூலம் மேலும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளபடி, பிரதமர் பாதுகாப்பு நிதியத்திற்கு அளிக்கப்படும் தொகை சிஎஸ்ஆர் செலவினமாக தகுதிபெறும்.

  1.  

முதல்வர் நிவாரண நிதி மற்றும் கோவிட்19 கான மாநில நிவாரண நிதிக்கு வழங்கப்படும் தொகை சிஎஸ்ஆர் செலவினமாகக் கருதப்படத் தகுதி பெறுமா?

முதல்வர் நிவாரண நிதி அல்லது கோவிட்19 கான மாநில நிவாரண நிதி ஆகியவை நிறுவனச் சட்டம் 2013 ஷெட்யூல் VII இல்சேர்க்கப் படவில்லை. எனவே இந்த நிதியங்களுக்கு வழங்கப்படும் தொகை சிஎஸ்ஆர் செலவினமாகக் கருதப்படத் தகுதி பெறாது

  1.  

மாநில பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு வழங்கப்படும் தொகை சிஎஸ்ஆர் செலவினம் ஆக தகுதி பெறுமா?

நிறுவனச் சட்டம் 2013 ஷெட்யூல் VII ஐட்டம் நம்பர் xii படி, கோவிட் 19 நோய்க்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு வழங்கப்படும் தொகை சிஎஸ்ஆர் செலவினமாக தகுதி பெறும். இதுகுறித்து  மார்ச் 23 தேதியிடப்பட்ட பொது சுற்றறிக்கை எண் 10/2020 இல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  1.  

சிஎஸ்ஆர் பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள தொகையை கோவிட்19 தொடர்பான பணிகளுக்காக செலவிடுவது சிஎஸ்ஆர் செலவீனமாக தகுதி பெறுமா?

சிஎஸ்ஆர் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை /தொகையை கோவிட்19 தொடர்பான பணிகளுக்காக செலவிடுவது, சிஎஸ்ஆர் செலவினமாக தகுதிபெறும் என்று அமைச்சகம் மார்ச் , 23  தேதியிடப்பட்ட தனது பொது சுற்றறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. கோவிட்19 தொடர்பான செயல்பாடுகளுக்காக ஷெட்யூல் VII ஐட்டம் நம்பர் (i)மற்றும் (xii) பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, முன்னெச்சரிக்கை உடல்நலம் பேணும் நடவடிக்கைகள், சானிடேஷன் சுத்திகரிப்பு பணிகள், பேரிடர் மேலாண்மை பணிகள் தொடர்பான பணிகளுக்கும் செலவிடப்படலாம் என்றும் மேலும் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும் 18. 6. 2014 தேதியிடப்பட்ட பொது சுற்றறிக்கை எண் 21 /2014 ஷெட்யூல் VII ல் குறிப்பிட்டுள்ள பல்வேறு ஐட்டம்கள் மிகவும் பரவலான அடிப்படையிலானவை. எனவே இந்த நோக்கத்திற்காக இவை தாராளமாக விளக்கமளித்துக் கொள்ளப்படலாம்

  1.  

பொது முடக்கத்தின் போது ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் ஊதியமும் கூலியும் சம்பளமும் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் செலவினத்தில் செலவினமாக கருதப்படலாமா?

ஊதியம், கூலி, சம்பளம் வழங்குவது சாதாரண சூழ்நிலைகளில் ஒரு நிறுவனத்தின் ஒப்பந்த மற்றும் சட்டரீதியிலான கடப்பாடாகும்.

பொது முடக்கத்தின் போது வேறு வேலைவாய்ப்புக்கும்வாழ்வாதாரத் திற்கும் மாற்று வழிகள் இருக்காது என்பதால் நிறுவன ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் சம்பளம் ஊதியம் கூலி வழங்குவது முதலாளிகளின் /தொழில் நிறுவனங்களின்/பணியமர்த்து பவர்களின் தார்மீகக் கடமையாகும். எனவே ஊரடங்கு காலத்தின்போது   (இதர சமூக விலகியிருத்தல் தேவைகள் அமல்படுத்தப்படுவது உட்பட) ஊழியர்கள் தொழிலாளர்கள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் சம்பளம் கூலி சிஎஸ்ஆர் பலவீனமாக கருதப்பட தகுதி பெறாது.

  1.  

நிறுவனத்தின் இடைக்கால / தாற்காலிக தினக்கூலி பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் கூலி பொது முடக்கத்தின் போது சிஎஸ்ஆர் செலவினமாக கருதப்படலாமா?

ஊரடங்கு காலத்தின்போது இடைக்கால அல்லது தாற்காலிக அல்லது தினக்கூலி பணியாளர்களுக்கு பணம் வழங்குவது என்பது நிறுவனங்களின் தார்மீக, மனிதாபிமான, ஒப்பந்த அடிப்படையிலான கடப்பாடாகும். நிறுவனச் சட்டம் 2013 பிரிவு 135 இன் கீழ் சி எஸ் ஆர் க்கான நிதி ஒதுக்க வேண்டும் என்ற சட்ட ரீதியான கடப்பாடு உள்ள நிறுவனமாக இருந்தாலும் மற்ற எந்த நிறுவனமாக இருந்தாலும், அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனவே இடைக்கால அல்லது தாற்காலிக அல்லது தினக்கூலி பணியாளர்களுக்கு ஊரடங்கு காலத்தின் போது வழங்கப்படும் சம்பளம் கூலித் தொகை சிஎஸ்ஆர் செலவினமாக கருதப்படமாட்டாது.

  1.  

இடைக்கால தாற்காலிக தினக்கூலி பணியாளர்களுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை சிஎஸ்ஆர் செலவினமாக தகுதி பெறுமா

இடைக்கால தற்காலிக தினக்கூலி பணியாளர்களுக்கு அவர்களது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம், கூலித் தொகைக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டால், அதிலும் அது குறிப்பாக கோவிலட்19 தொற்றுக்கு எதிரான நோக்கங்களுக்காக வழங்கப்பட்டால், அத்தொகை சிஎஸ்ஆர் செலவினமாக கருதப்பட தகுதிபெறும். இவ்வாறான விலக்கு ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும் விலக்காகும்.அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்கள் இதற்கென தெளிவான வெளிப்படையான சிறப்பு அறிவிக்கை பிரகடனம் ஒன்றை வெளியிட வேண்டும். அந்தப் பிரகடனம் சட்டபூர்வமான ஆடிட்டர் ஆல் தணிக்கையாளரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்

 

****

 



(Release ID: 1613583) Visitor Counter : 352