விவசாயத்துறை அமைச்சகம்

பொது முடக்கக் காலத்தில் வேளாண்மை, அதுதொடர்பான துறைகளை ஊக்குவிக்க வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை மேற்கொண்ட முயற்சிகள்

Posted On: 11 APR 2020 6:55PM by PIB Chennai

பொது முடக்கக் காலத்தின்போது, விவசாயம் மற்றும் அது தொடர்பான பணிகள் அடிமட்ட அளவில் நடைபெறுவதற்கு வழிவகை செய்ய மத்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

  1. பொது முடக்கத்தின் போது பயிர் மென்பொருளை மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழுவினர் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வல்லுநர்கள் / அதிகாரிகள் வீட்டிலிருந்தே பணியாற்றியபடி, தனியார் இணைய மெய்நிகர் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  2. இதுநாள் வரை, 1.25 லட்சம் டன்களுக்கும் மேலான பல்வேறு ரசாயனங்களை இறக்குமதி செய்வதற்காக 33 இறக்குமதி சான்றிதழ்களை மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழுவினர் வழங்கியுள்ளனர். பூச்சிக்கொல்லிகளை ஏற்றுமதி செய்வதற்காக 189 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக பல்வேறு பிரிவுகளில் 1,263 பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
  3. பொது முடக்கம் காரணமாக, கரீஃப் பயிர்கள்-2020 குறித்த தேசிய கருத்தரங்கை ஏப்ரல் 16ம் தேதி காணொலிக்காட்சி மூலம் நடத்த வேளாண் துறை முடிவுசெய்துள்ளது.
  4. வேளாண் பொருட்களை எடுத்துச் செல்வது, பொது முடக்கக் கால அனுமதிச்சீட்டுகளை வழங்குவது, பேக்கேஜிங் தொழிற்சாலைகள் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
  5. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்துக்காக 236 சிறப்பு சரக்கு ரயில்களை இயக்க (அதில் 171 ரயில்கள் கால அட்டவணைப்படி இயங்குபவை) 67 வழித்தடங்களை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.


(Release ID: 1613519) Visitor Counter : 172